பக்கம்:திரு. வி. க.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 அச. ஞானசம்பந்தன்

திருப்போர் அனைவர் உள்ளத்திலும் மலர்மவதற்குக் காரண மான ஓங்கார ஒலி என்ற பொருளைத் தருதல் காண்க. பெரியார் அவர்கள் மலர் சிலம்பை வினைத்தொகையாக்கி யமையின் மலர் சிலம்பு அடி என்றும், சிலம்படி, என்றும், மலரடி என்றும் பொருள் கொள்ள வாய்ப்பிருக்கிறது. இந்த நிலையில் இதே கருத்தைக் கம்பநாடன் கூறியிருப்பதையும் நினைவில் கொணர்தல் சாலப் பொருத்தமேயாகும்.

“வேதங்கள் அறைகின்ற உலகெங்கும் விரிந்தன நின் பாதங்கள் இவையென்னில் படிவங்கள் எப்படியோ?”

“உலகெலாம் உணர்த்து ஒதற்கரியவன் நிலவுலாகிய நீர்மலி வேணியன்”

என்ற இவ்விரண்டினையும் வைத்துக்கொண்டு இறை வனின் இலக்கணத்தையும், உயிர்களின் இலக்கணத்தையும், உயிர்களைப் பற்றி நிற்கும் பாசமாகிய அறியாமையின் இலக்கணத்தையும் நன்கு விளக்குகின்றார் பெரியார்:

‘உலகெலாம் உணர்ந்து ஒதற்கு அரியவன் என்னும் முதலடியிலேயே முப்பொருளின் இயல்கள் குறிப்பாக விளங்குகின்றன. உலகெலாம் என்றது உயிர்களை, உயிர்கள் இறைவனை உணர்ந்து ஒதற்கு இயலாமை அவற்றின் அறியாமையைக் காட்டுகிறது. ‘அரியவன்’ என்பது ஆண்டவனை உணர்த்துகிறது.

  • ஆண்டவன், அரியவனாயினும், எல்லா வற்றையுங் கடந்து நிற்கும் அகண்ட சொருபனாயினும், அவன் உலகு உயிர்களுடன் கலவாது பிரிந்து நிற்கின்றானில்லை. உலகெலாமாகி வேறாய் உடனு மாய் என்பது சிவஞான சித்தியார், உடனுள்ள
  • கம்ப இராமாயணம், விராதன் வதைப் படலம்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/220&oldid=695517" இலிருந்து மீள்விக்கப்பட்டது