பக்கம்:திரு. வி. க.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 221

என்பதற்கும் பொருள் கொள்க; புலன்களை நெறியில்லா நெறியில் செலுத்தாமையே புலனடக்க மென்பது புலன்களை அழித்துக் கொள்வதன்று.

புலன்கள் அழிக்கத் தக்கனவாயின். அவை படைப்பில் அமையவேண்டுவதில்லை. %fY62/ படைப்பில் அமைந்துள்ளன. படைப்பில் அமைந் துள்ளனவற்றை அழிக்கப் புகுவது இயற்கை நெறி பற்றி ஒழுகுவதாகுமோ? புலன்கள் அழிக்கப்படின் அவைகள் அசேதனமாகும். -

“அஞ்சும் அடக்கடக் கென்பர் அறிவிலார் அஞ்சும் அடக்கும் அமரரும் அங்கில்லை அஞ்சும் அடக்கில் அசேதனம் ஆகுமென்றிட்டு அஞ்சும் அடக்கா அறிவறிந் தேனே”

என்றார் திருமூலர். ஆகவே, அவித்தல் என்பது அறவே அழிப்பதன்று; புலன்கள் தீய வழியிலுழன்று கொடுமை செய்வதை அடக்கி, அவைகளை நல்வழியில் செலுத்துவதென்க. - -

ஐந்தவித்துதான் எவன்? இறைவன் என்று சிலர் கூறுப. இறைவனுக்கு ஐந்து உண்டோ? -

இறைவன் பிறப்பிறப்பு இல்லாதவன்; உருவம் அருவம் அருவுருவம் முதலிய எல்லாவற்றையுங் கடந்தவன்; மாற்ற மனங் கழிய நின்றவன். அவனுக்கு ஐம்புலனேயில்லை. புலனேயில்லா ஒருவனைப் புலனை அவித்தவன் என்று எப்படிச் சொல்வது?

‘ஐந்தவித்தான் என்றமையால், ஒருபோது ஐம்புலக் குறும்புடையனாயிருந்து, பின்னை அக் குறும்பை அவித்தவன் என்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்குகிறது. இறைவனோ புலனில்லாதவன். புலனே இல்லாதபோது, குறும்புக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/231&oldid=695529" இலிருந்து மீள்விக்கப்பட்டது