பக்கம்:திரு. வி. க.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 225

in restlessness and pain. On Wednesday I knew the remedy. I must do penance. In the Saty grah-ashram at the time of morning prayer we ask Shiva, God of Mercy to forgive our sins knowingly or unknowingly committed. My penance is the prayer of a bleeding heart for forgiveness for sins unknowingly committed.”

“கோஹத் செய்தி எனது உள்ளத்தில் அனல் மூட்டிற்று. ஏதாயினுஞ் செய்ய வேண்டுமென்று தோன்றிற்று. இரண்டு நாளிரவு அமைதியின்றியும் நேரயோடுங் கழித்தேன்; புதன்கிழமை மருந்து கண்டேன். நான் பிராயச்சித்தம் செய்துகொள்ள வேண்டும். சத்தியாக்கிரக ஆசிரமத்தில், காலை ஜெபத் தில், தெரிந்தோ தெரியாமலோ செய்யப்படும் எங்கள் பாவங்களை மன்னிக்குமாறு கருணைக் கடவுளாகிய சிவபரம்பொருளை நாங்கள் வேண்டுகிறோம். அறியாமற் செய்த பாவமன்னிப்புக்குரிய பிராயச் சித்தம் செந்நீர் பொங்கும் எனது இதயத்தினின்றும் எழும் ஜெயமேயாகும்.”

அடிகளார் சபர்மதி ஆஸ்ரமத்தை முதன்முதலில் நிர்மாணித்தபொழுது அதற்கெனச் சிலபல விதிகளையும் தோற்றுவித்திருந்தார். அவை ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதப் பெற்றிருந்தன. நம் பெரியோரவர்கள் மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்ற நூலில் இவ்விதிகளைத் தமிழாக்கம் செய்து தந்துள்ளார். அதில் ஒரு பகுதியை மட்டும் ஈண்டுத் தருகிறேன். அரசியல் கருத்து ஒன்றை அதிலும் அடிகளார் தோற்றுவித்த சிக்கலான அரசியல் கருத்து ஒன்றை ‘சுதேசியம் என்பது பற்றிய கருத்தைக் கூறும்

சைவத்தின் சமரசம், பக்கம் 86, 87.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/235&oldid=695533" இலிருந்து மீள்விக்கப்பட்டது