பக்கம்:திரு. வி. க.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

226 இ. அ.ச. ஞானசம்பந்தன்

பகுதி இது. இதனைத் தமிழாக்கஞ் செய்துள்ளார் பட்டம் பெறாத திரு.வி.க. அவர்கள்:

“பொருளாக்குவோர் வாயிலாகவோ, மற்றெவ் வாயிலாகவோ மோசம் பொருந்தத்தக்க பொருள் களைப் பயன்படுத்தல் மெய்ம்மைக்கு மாறுபடுவ தாகும். ஆதலால் உண்மை கடைப்பிடித்து நிற்போன் மான்செஸ்டரில்- ஜெர்மனியில்-அல்லது இந்தியா வில் இயந்திர சாலைகளில் செய்யப்பட்ட பொருள் களை உபயோகித்தல் கூடாது. ஏன்? அவைகளில் மோசமில்லை என்று அவனுக்குத் தெரியாமை யால் என்க. மேலும் இயந்திரசாலைகளில் தொழிலாளர் பெரிதும் வருந்துகின்றனர். இச்சாலைகளில், தொழில் புரியும் மக்கள் அகால மரணமடைகிறார்கள். இம்மரணத்துடன் சாலைகளில் தி உபயோகித்தல் பல உயிர்களின் அழிவிற்குக் காரணமாயிருக்கிறது. அந்நிய சாமான்களும், இயந்திரத்தால் செய்யப்பட்ட சாமான்களும் அஹிம்சா தர்மவான்களை அத்தர்மத்தி னின்றும் விலக்கித் தள்ளுவனவாயிருக்கின்றன. இச் சாமான்களின் உபயோகம் கள்ளாமைக்கும் பொருள் திரட்டாமைக்கும் நேர்மாறாக நிற்பது. கைத்தறியால் நெய்யப்படும் நமது எளிய துணிகளுக்குப் பதிலாக அந்நியத் துணிகளை உடுத்துகிறோம். வழக்கமென்பது அழகை அளிப்பதாகக் கொள்ளப்படுவதே இதற்குக் காரணம். உடலைச் செயற்கையால் அணி செய்வது பிரமசரியத்துக்குத் தடையாகும். பிரமசாரி எளிய உடை தவிர மற்றெதையுந் தள்ளக் கடவன். பொத்தான் அந்நியவெட்டு முதலிய யாவற்றையும் தவிர்ப்பதற்கும், எளிய உடை அணிவதற்கும், எளிய வாழ்வுக்கும் சுதேச விரதம் வேண்டற்பாலது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/236&oldid=695534" இலிருந்து மீள்விக்கப்பட்டது