பக்கம்:திரு. வி. க.pdf/238

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 அ.ச. ஞானசம்பந்தன்

தமக்கே உரியர் என்றால் --

பெரியோர்களே! இந்த மூன்று நாட்களிலும் தமிழ் கூறு நல்லுலகம் பத்தொன்பது இருபதாம் நூற்றாண்டுகளில் நமக்கு அளித்த ஒரு மாபெருஞ் செல்வரைப் பற்றி ஒருவாறு கண்டோம். கருவில் திருவுடைய பெரியார் இந்த மொழிக்கும் இலக்கியத்திற்கும் ஆற்றிய தொண்டு அளவிடற்கரிய தொன்றாகும். பல்வேறு முகமுடைய அப்பெரியாரின் மூன்று முகங்களைப்பற்றி மட்டும் இம் மூன்று நாட்களில் பேச முடிந்தது. யானை கண்ட குருடர்போலத் தமிழர்களில் பலரும் திரு.வி.க: என்ற யானையின் முழுத்தன்மையை அறியாமல் அவர் குறிப்பிட்ட ஒரு சமயவாதி என்றும், அரசியல்வாதிதான் என்றும், அதிலும் காந்தீயவாதி என்றும், மார்க்கிஸவாதி என்றும். தொழிலாளர் இயக்கவாதி என்றும், தமிழாசிரியர் என்றும் தத்தமக்கே உரிமை கொண்டாடினர். ஆனால், அப் பெரியாரை தயைகூர்ந்து புட்டியில் அடைத்து முத்திரை இடவேண்டா. அவர் கூறும் பரம்பொருள் கற்பனைக்கு அடங்காதிருப்பது போல அவரும் முத்திரைக்குள் அடங்காதவராகவே இருக்கின்றார். ஆம், இருக்கின்றார் என்று நிகழ்காலத்தால் மறுபடியும் குறிக் கின்றேன்.

தமிழ் உள்ளவரை

தமிழ் என்று ஒரு மொழியும், தமிழின் என்று ஓர் இனமும் இருக்கின்றவரை, தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று இருக்கின்றவரை அத் தமிழ்ப் பண்பாடு எத்துணைப் பரந்து விரிந்து உள்ளது என்பதைத் தமிழனுக்கும் உலகிற்கும் எடுத்துக்காட்டிய பெரியார் இருந்துதான் வருவார். ஐந்தேகால் அடி உயரமும் 10 பவுண்டு எடையுமுடைய திரு.வி.க. என்ற மானிட வடிவம் ஒன்றுதான் இன்றில்லை. ஆனால், அந்த வடிவத்தின் அகத்தே தோன்றிய ஒப்பற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/238&oldid=695536" இலிருந்து மீள்விக்கப்பட்டது