பக்கம்:திரு. வி. க.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 15

என்பது உண்மைதான். ஆனால், கல்வியால் மிக்கவர்களை உலகம் போற்றுவதைக் காட்டிலும் மானிடத் தன்மை’ நிறைந்திருந்த இயேசுநாதர் போன்றவர்களை அறிந்து அதிகம் போற்றியுள்ளது. கல்வி போன்ற வழிகள் (சாதனங்கள்) மனிதன் மானிடத் தன்மையைப் பெறுவதற்கு உதவுபவை களே தவிர அவையே பயனல்ல. ஆனால், யாராவது ஒரு மனிதன் இந்த வழியை மேற்கொள்ளாமலும் அந்தப் பயனை அடையக்கூடுமாயின் அத்தகைய மனிதனிடம் எந்த வழியின்மூலம் இந்தப் பயனை அவன் அடைந்தான் என்று யாரும் கேட்பதில்லை. இராமகிருஷ்ண பரமஹம்சர் போன்ற வர்கள் கல்வியாகிய வழியை மேற்கொள்ளாமலே மானிடத் தன்மை என்ற பயனைப் பெற்று விட்டனர். விவேகானந்தர் போன்றவர்கள் கல்வியாகிய சாதனத்தையும் பூரணமாகப் பெற்று அதன் பயனாகிய மானிடத் தன்மையையும் பெற்றிருந்தனர். வழி, பயன் என்ற இவை இரண்டனுள் வழியைப் பின்பற்றாமல் பயனைப் பெறுவது தான் இன்றியமையாதது.

வழியும் பயனும்

திரு. வி.க. அவர்கள் வழி, பயன் என்ற இரண்டையும் பெற்றிருந்தார். ஆனால், வழியாகிய கல்விய்ை பெற்றவர் அனைவரும் பயனாகிய மனிதத் தன்மையைப் பெறுவர் என்று கூறல் இயலாது. பயனை அடைய முடியாத கல்வி உண்மையான கல்வியே அன்று. இத்தகைய கல்வி பெறுதல் பயனை அளிக்காது போவதுடன் மனிதனைத் திசை மாற்றியும் விட்டுவிடுகிறது. வீணான அகங்காரம் முதலிய வற்றை மனிதன் பெறுமாறும் செய்துவிடுகிறது. பயனைத் தராத கல்வி வீண் சுமையாகவே அமைந்துவிடுகிறது. இத்தகைய கல்வியை மனத்தில் நினைத்துத்தான் மணி வாசகப் பெருமான் கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்’ என்றும் கூறிப் போனார். தாயுமானவ அடிகளும் கற்றார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/25&oldid=695540" இலிருந்து மீள்விக்கப்பட்டது