பக்கம்:திரு. வி. க.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 19

எனவே, அளவுக்குட்பட்ட தீமையைப் பொறுத்துக் கொள் என்று கூறுவது சரியே. ஆனால், அளவில் மிஞ்சும் தீமையைப் பொறுத்துக் கொள் என்று கூறுவது பொருளற்ற ஒன்றாகி விடும். இந்த இடர்ப்பாட்டை அறிந்த பூங்குன்றன் புதிய வழி வகுக்கின்றார். பிறர் தீமை செய்கின்றார் என்று நினைத்து அதனைப் பொறுத்துக் கொள்ள முயல்வதைக் காட்டிலும் அவர் தீமையே செய்யவில்லை என்று நினைப்பதால் உண்மையான பயன் ஏற்படும். தீதும் நன்றும் நிகழும்பொழுது அது பிறர் செய்வதால் ஏற்படுகின்றன என்று கருதாமல் தாமே அதற்குப் பொறுப்பு என ஒருவர் எண்ணக் கூடுமாயின், அதனால் அவர் யார்மாட்டும் பகையோ, காழ்ப்போ கொள்ளவேண்டிய சூழ்நிலை ஏற்படாது.

கவிதையின்படி வாழ்ந்தவர்

திரு. வி.க. அவர்கள் புறநானூற்றின் இந்த இரண்டு அடிகளையும் வாழ்வில் மேற்கொண்டார். யாதும் ஊர் யாவருங் கேளிர் என்று எவ்வாறு அவரால் நினைந்து வாழ முடிந்தது என்றால், அடுத்த அடியின்படி வாழ்ந்தமையா லேயே முடிந்தது என்று கூறிவிடலாம். அதாவது, தமக்கு வரும் நலம் தீங்கு என்ற இரண்டுமே பிறர் தரவில்லை என அவர் உணர்ந்து வாழ்ந்தாராகலின் அவரால் யாரையும் கேளிராகக் கொள்ள முடிந்தது. இவை பற்றிப் பேசுவதும் எழுதுவதும் எளிது. ஆனால், இதனை வாழ்க்கையில் மேற்கொண்டு நடத்தல் என்பது அத்துணை எளிதன்று. இவற்றை நடைமுறையில் மேற்கொள்ளக்கூடிய பண்பாளர் ஒருவரிடம் கல்வி முதலிய வேறு எத்தகைய சிறப்பையும் உலகம் எதிர்பார்ப்பதில்லை. ஆனால், இப் பண்பாளர் களிடம் கல்வி முதலியனவும் இருந்துவிடின் அது பொன் மலர் நாற்றமும் பெற்றது போலாம். இத்தகைய பெரியார்கள் நீண்ட காலத்துக்கு ஒருமுறைதான் தோன்றுவர். அத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/29&oldid=695544" இலிருந்து மீள்விக்கப்பட்டது