பக்கம்:திரு. வி. க.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 இ அச. ஞானசம்பந்தன்

ஒரு பெரியார் நம்முடைய தமிழ்நாட்டில் நம் காலத்தில் தோன்றியது நாம் செய்த பெரும் பேறாகும்.

புலனடக்கம் உடையார்

மானிடத் தன்மை பெற்ற புெரியார்கள் உறுதியான புலனடக்கம் உடையவர்களாகவே இருப்பர். இங்குப் புலனடக்கம் என்று குறிப்பிடுவது புலன்களை ஒரு நெறிப் படுத்திச் செலுத்தும் இயல்பையே தவிர அவற்றைக் கழித்து ஒழிப்பதையன்று. திரு. வி.க. அவர்கள் இதுபற்றி விரிவாகத் தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்.

பிறவியின் பயன்

திரு. வி.க. அவர்கள் மிக இளமையிலேயே இத் தொண்டுள்ளத்தைப் பெற்றிருந்தார் என்று அறிய முடிகிறது. அவருடைய வாழ்க்கைக் குறிப்பில் காணப்பெறும் கீழ்வரும் பகுதி இதனை வலியுறுத்துகிறது.

“விடுதலை பலவிதம். உடலுடனும் விடுதலை பெற்றிருக்கலாம்; உடலை விடுத்தும் விடுதலை பெற் றிருக்கலாம். வினையற்ற உடல் விடுதலை அடைவது; வினையுற்ற உடல் விடுதலை அடையாதது. வினையற் றால் உடல் இராது என்று சிலர் கூறுப. அக்கூற்றுக்கு, வினையற்றால் மாயா உடல் இராது என்று பொருள் விளக்குக. வினையற்ற உடல் ஆண்டவன் கோயிலாகின்றது; அதை மாயா உடல் என்று கொண்டு ஏன் இடர்ப்படல் வேண்டும்?

வினையுற்ற மாயா உடலை வினையற்றதாக்கி: அதை ஆண்டவன் கோயிலாக்க ஏன் முயலல் வேண்டும்? விடுதலைக்கு என்க. விடுதலைக்கு வழி என்ன? உலகம் பல கூறும். கீதை வழிகாட்டியுள்ளது. கீதை நிஷ்காமிய கர்மத்தை-பயன் கருதாத் தொண்டை அறிவுறுத்துகிறது. பயன் கருதாத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/30&oldid=695546" இலிருந்து மீள்விக்கப்பட்டது