பக்கம்:திரு. வி. க.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 21

தொண்டு செய்யச் செய்ய மாயாவினை சேராது; உடல் ஆண்டவன் கோயிலாகும். இதுவே விடுதலை; பிறவி நோக்க நிறைவேற்றம்.

யான் பிறப்பை வெறுக்கின்றேனில்லை; அதை விரும்புகிறேன். தொண்டுக்குப் பிறவி பயன்படல் வேண்டுமென்பது எனது வேட்கை. எனது வேட்கை ஒருவாறு நிறைவேறியே வருகிறது. இளமையில் என் தொண்டு காமியத்தில் சென்றது; பின்னே அது நிஷ்காமியமாக மாறியது. அம் மாற்றம் எப்படியோ உற்றது! நல்ல நூல்களும் பெரியோர் சேர்க்கையும், இல்வாழ்க்கையும் இயற்கை இறையின் அருளும் மாற்றத்துக்குக் காரணம் என்று கூறுவேன்.

தொண்டுக்குரிய பிறப்பை யான் தாங்க அருள் புரிந்த என் தாய் தந்தையர்க்கு யான் என்ன கைம்மாறு செலுத்த வல்லேன்? அவர்களை மனமொழி மெய்களால் வணங்குகிறேன். இவ் வணக்கம் போதுமா? வேறு காண்கிலேன்! என் செய்வேன்! பெற்றோர் அன்புக்கு ஈடு செய்யும் பொருள் எவ்வுலகில் உண்டு. இல்வாழ்க்கை வாழ்க! வெல்க! இல்வாழ்க்கையை வாழ்த்த வாழ்த்த என் மனம் குளிர்கிறது.

தொண்டினுஞ் சிறந்த ஒன்று இருக்கிறதா?

எனக்கு ஒன்றுந் தோன்றவில்லை. தொண்டே எனது வாழ்க்கை; எனது செல்வம்; எனது ஆருயிர்; எனது சமயம்; எல்லாம்; எல்லாம். விளைவு என்ன ஆயினும் ஆக. அதுபற்றிய கவலை எனக்கில்லை. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே

எனக்குப் பிறப்பு வேண்டும்; பிறப்புப் பயன் கருதாத் தொண்டுக்குப் பயன்படுதல் வேண்டும். சாதி, மதம், மொழி, நிறம் நாடு முதலியவற்றைக் கடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/31&oldid=695547" இலிருந்து மீள்விக்கப்பட்டது