பக்கம்:திரு. வி. க.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 25

G

தோன்றுகிறது. அகிலம் ஒரு பெருங் கழகமாகக் காணப் படுகின்றது.

அக் கழக மாணாக்கருள் யானும் ஒருவ னானேன். அங்கே ஆசிரியன்மாரில்லை. இயற்கைக் கூறு ஒவ்வொன்றும் ஆசிரியத் தொண்டு செய்கிறது. இங்கே காவியமும் ஒவியமும் புறத்தே வேறுபாடு காட்டுகின்றன. அங்கே வேறுபட்ட காட்சியே கிடையாது. எல்லாம் காவியம் ஒவியம். இங்கே பள்ளியில் பல திறப் பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. அங்கும் பல திறக் கலைகளிருக்கின்றன. யான் மாணாக்கன், இயற்கைக் கழகத்தில் பயில்கின்றேன்.

ஞாயிற்றை நோக்குகிறேன். ஐயங்கள்

எழுகின்றன. அவற்றை எப்படிக் களைந்துகொள்வது?

ஞாயிற்றையே நோக்கி, ஞாயிறே! நீ எழுவதும் மறைவதும் உண்மையா? காலையிலும் மாலையிலுஞ் சிவந்த கோலம் தாங்குவதென்னை? உன்னிடத்தில் ஏழு நிறம் அமைவானேன்? எட்டு ஏன் அமைய வில்லை? நீ எற்றுக்கு ஒளி கால்கிறாய்? ஒளி உன்னுடையதா? பிறருடையதா? என்று கேட்பேன். எளிதில் விடைகள் கிடைப்பதில்லை. ஞாயிற்றை உன்னி உன்னி அதில் மூழ்கி ஒன்றுவேன். விடைகள் கிடைக்கும். -

வேனிற் காலம்; தென்றற் காற்று; கண் விழித்தேன். அண்ணாந்து பார்க்கிறேன்; நீலவானம்; முத்துகள் போன்ற உடுக்கள்; வெண்திங்கள் உழவு. ஆனந்தம். வானமே! நீல நிறத்தை எப்படிப் பெற்றாய்? அஃது உண்மையா? உருவெளியா? உன்னிடத்திலா உடுக்கள் உறைகின்றன? உடுக்களே! உங்கள் வரலா றென்ன ? உங்களிடத்தில் உயிர்கள் வாழ்கின்றனவா? உங்களால் இம் மண்ணுலகுக்கு ஏதேனும் நலன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/35&oldid=695551" இலிருந்து மீள்விக்கப்பட்டது