பக்கம்:திரு. வி. க.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 29

முதலியவற்றைப் பெருக்கி வாழ்க்கையை அல்லற் படுத்தும். இந்நாளில் இயந்திரம் அதிகம். அதனால் போலி ஏட்டு நூல்கள் ஒன்றினின்றும் ஒன்றாகப் பல்கிப் பெருகுகின்றன. அப் பாழ்கள் வாழ்க்கைக்கு இன்றியமை யாத அமைதியைக் கெடுத்து உலகை எரித்துவரல் கண்கூடு, இயற்கைக் கல்வியே மக்களை நல்வழிப்படுத்தி அவர்கட்கு அந்தண்மை என்னும் பொதுமை யுணர்வை எழுப்பவல்லது.

எனது பள்ளிப் படிப்பு, கனியாது வெம்பி வீழ்ந்தது. பின்னே ஏட்டுக் கல்வி பயின்றேன். அது முதலில் என்னைச் செயற்கைச் சேற்றில் சிறிது அழுத்தியது; பின்னே இயற்கைக் கல்வியைப் பெறுவித்தது. முதலில் கேடு விளைந்தமைக்குக் காரணம் பள்ளிப் படிப்புச் சிறிது பெற்றதன் பயனாய் இருக்குமோ? -

எனக்குப் பள்ளிப் படிப்புப் பெருகியிருக்குமேல் எனது நிலை என்னவாகியிருக்குமோ? பொருட் செல்வம் பெருகியிருக்குமோ? களியாட்டில் அயர்ந் திருப்பேனோ என்னவோ தெரியவில்லை. எவ் வழியிலோ என் பள்ளிப் படிப்புப் பட்டது. யான் பொருட் செல்வமும் பெற்றேனில்லை; களியாட்டிலும் அயர்ந்தேனில்லை. இயற்கைக் கல்வியால் யான் பொதுமையுணர்வு பெறலானேன். எனக்கு யாதும் ஊராகியது; எவருங் கேளிராயினர். எனது நிலை மற்றவர்க்கு எப்படிப் புலனாகிறதோ யான் அறியேன்.

எனது பள்ளிப் படிப்பைக் கெடுத்து, என்னை ஏட்டுக் கல்வியில் நிறுத்தி, எனக்கு இயற்கைக் கல்வி யைப் பெறுவித்தது எது?” .

1. திரு. வி.க. வாழ்க்கைக் குறிப்புகள், பக்கம் 220-221

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/39&oldid=695555" இலிருந்து மீள்விக்கப்பட்டது