பக்கம்:திரு. வி. க.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 33

படியாக உலகுக்கு உணர்த்தினர். இப் பேருணர்வு பெறுதற்குரிய அரசியல், கல்வி, தொழில் முதலியன உலகுக்குத் தேவை.” கருத்துப் புதுமை

- இக் கருத்தைப் பெரியார் எழுதிய காலம் உன்னுதற் குரியது. 1922ஆம் ஆண்டு எத்தகைய காலம் என்பதைச் சிந்தித்தல் வேண்டும். 1917ஆம் ஆண்டு, இரஷ்ய நாட்டில் நிகழ்ந்த புரட்சி வெற்றி கண்ட ஆண்டாகும். அப் புரட்சிக்கு ஆணிவேராக அமைந்தவர் லெனின் ஆவார். லெனினுக்கு குருவாக அமைந்தவர் கார்ல் மார்க்ஸ் ஆவார். கார்ல் மார்க்ஸ் திரு. வி.க.வால் போற்றி ஏற்றுக் கொள்ளப் பெற்றவர். மார்க்ஸைப் போற்றும் ஒருவர் அந்த மார்க்ஸின் சீடரான லெனினையும் போற்றியுள்ளார். ஆனால், அந்த லெனின், சமயம் என்பது மக்களுக்கு அபின் போன்றது, என்று கூறியுள்ளதை மறுத்தல் ஆகாது. கார்ல் மார்க்ஸ், லெனின் இருவரும் தார்க்கீக உலகாயதவாதிகள் (Dialectic Materialists) அவர்கள் இருவரும் உலக சகோதரத்துவத்தைப் பெரிதாகப் போற்றினர் என்பது உண்மை. ஆனால், உழைப்பாளரை மட்டும் சோதரராகப் போற்றினர் அவர்கள். உலக சோதரத்துவம் வேண்டும் என்று கூறிய அளவில் அவர்கள் கருத்தை ஏற்றுக்கொண்டார் திரு. வி.க. ஆனால், அந்தச் சகோதரத்துவத்தை நிலைநாட்ட வன்முறையையும் கையாளலாம் என்று அவர்கள் கூறியதை இவர் ஏற்கவில்லை. மார்க்ஸ் தத்துவத்தில் குறை

மார்க்ஸ்-லெனின் தத்துவத்தில் மற்றோர் பெருங்குறை அமைந்து கிடக்கிறது. உலகம் முழுவதும் அவர்கள் கொள்கை பரவிவிட்ட காலத்திலும், உழைப்போர் அனைவரும் சமம் என்பது ஏட்டளவில் இன்றி வாழ்க்கையில் உண்மையாகவே நடைமுறைக்கு வந்து விடுவதாக வைத்துக்கொண்டால் அந்தக் காலத்திலும், அத்தகைய நாட்டில் வாழும் மனிதன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/43&oldid=695560" இலிருந்து மீள்விக்கப்பட்டது