பக்கம்:திரு. வி. க.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ல் அச. ஞானசம்பந்தன்

அமைதியுடன் வாழ்ந்துவிட முடியுமா? மனிதன் ரொட்டித் துண்டால் மட்டும் வாழ முடியாது என்பது விவிலிய நூல் வாக்கு. இந் நாட்டிடைத் தோன்றிய தமிழ் மூதாட்டியும், ‘உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்’ என்பதைக் கூறி, அதற்கு மேலும் ஒரு பிரச்சினையைப் பேசுகிறார். அந்த அடியை அடுத்துவரும் பகுதி சிந்திப்பதற்குரியது. உண்பது நாழிதான், உடுப்பது நான்கு முழந்தான்; ஆனால், அவற்றை அடுத்து எண்பது கோடி நினைந்து எண்ணுவன என்று வரும் பகுதியை மார்க்ஸியத் தத்துவத்தார் சிந்திக்க மறந்து விட்டனர். மனிதனுடைய வயிற்றை நிர்பபிவிடுவதால் மட்டும் அவனை அமைதியடையச் செய்ய இயலாது. அன்றியும், வன்முறையால் நிலைநாட்டப்படும் எவ்வளவு சிறந்த தத்துவமும் இறுதியில் வன்முறையாலேயே அழியும். வாள் எடுத்தவன் விாள்ாலே மாள்வன்’ என்ற விவிலிய நூல் வாக்கும், அழக் கொண்டவெல்லாம் அழப்போம் என்ற குறளும் சிந்தனையில் இருக்கவேண்டியவை.

இவற்றையெல்லாம் மனத்துள் வாங்கிக்கொண்ட தமிழ்ப் பெரியார் தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் உலக சகோதரத்துவம் காணப் புது வழி வகுக்கிறார். இறையுணர்வுடையார்க்கு உலக சோதரத்துவம் தானே வந்து அமையும். இதனால்தான் திரு. வி.க., எங்குமுள்ள பராபரத் துடன் தொடர்பு கொள்வதால் சகோதர நேயம் பிறக்கும் என்பது தெளிதற்பாலது. அதனால் உண்மை அமைதி நிலவும்” என்று எழுதிப் போனார்.

இத்துடன் பெரியார் நின்றாரில்லை. மார்க்ஸியக் கருத்துப்படிச் சமத்துவம் அடைந்த மனிதனுடைய மனம் வாளா கிடப்பதில்லை. உடலுக்குற்ற பசிப்பிணி இல்லை யாயினும் மனத்தில் உற்ற வெறுமை அவனைச் சும்மா

1. கிறிஸ்துவின் அருள் வேட்டல்’ 2. தமிழ்நாடும் நம்மாழ்வாரும், பக்கம் 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/44&oldid=695561" இலிருந்து மீள்விக்கப்பட்டது