பக்கம்:திரு. வி. க.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 35

விடுவதில்லை. அந்த வெறுமையைப் போக்க அவன் சிந்திக்கத் தொடங்கினால் விளைவது புரட்சி. இதனைத் தடுக்கவே, படையுதவியை நாடி என்றும் மக்களை அதிகார பலத்தின் கீழேயே வைக்கவேண்டியுள்ளது. மனித மனம் ஏதாவதொரு பொருளை நாடி அதனைப் போற்றிக் கொண்டிருக்கும் இயல்புடையது. அம் மனத்தால் போற்றப் படும் பொருளைப் பறித்து விட்டால் வேறு ஏதாவதொன்றை மனம் நாடத் தொடங்கிவிடும். இந்த உண்மையை அறிந்த சீனப் பொதுவுடைமைவாதிகள் கன்பூவியஸ், புத்தர் என்ற குறிக்கோள் மக்களைச் சீன மக்கள் மனத்திலிருந்து அகற்றி விட்டபிறகு, அந்த இடம் வெறுமையடையக் கூடாது என்பதற்காக மாசேதுங்கைக் கடவுளாக மாற்றி அமைத்து விட்டனர்.

மன அமைதிக்கு வழி எது?

அத்தகைய கொள்கையர் ஆட்சியில் இத்தகைய ஒரு கொடுமை நிகழும் என்பதை நன்குணர்ந்த திரு. வி.க. மார்க்கிஸ்த்துடன் ஆன்மீக சிந்தனையும் வளர வேண்டும் என்று கருதினார். பொது உடைமையாளர் கனவு காணும் சகோதரத்துவத்தைவிடத் திரு. வி.க. கண்ட சகோதரத்துவம் நின்று நிலைக்கக் கூடியது. பரம்பொருள் உணர்வு அடிப்படையில் ஏற்படும் இந்த சகோதரத்துவம் நிலைக்கக் கூடியது; வன்முறையை மேற்கொள்ளாதது. ஆனால், அதே நேரத்தில் வயிற்றுப் பாட்டைச் சமத்துவமாக்கும் மார்க்ளியத் தையும் திரு. வி.க. மறந்தாரில்லை. அனைவருக்கும் சமத்துவமான சந்தர்ப்பமும் தேவைப் பூர்த்தியும் அளிக்கின்ற வரை மார்க்ஸியக் கொள்கை திரு. வி.க.வுக்கு உடன்பாடு தான். ஆனால், மனிதனுடைய தேவைகளில் உடலைப் பற்றிய பகுதியைப் பூர்த்தி செய்யும் இக் கொள்கை அவனுடைய மறு பாதியை, அதாவது, மன உலகை வெறுமையாக விட்டுவிடுவதைத் திரு.வி.க. உணர்ந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/45&oldid=695562" இலிருந்து மீள்விக்கப்பட்டது