பக்கம்:திரு. வி. க.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 அச. ஞானசம்பந்தன்

உடனே அதனை நிரப்பும் வழியைக் கூறுகிறார் மார்க்ஸிய மும் காந்தியமும் என்ற நூலில்

“மார்க்கிஸ் முனிவன் மார்க்கம் கண்டனன்

அந்த மார்க்கம் யாக்கை போன்றது: ஆவி நல்க மேவினன் காந்தி மார்க்கிஸ் காந்தி மார்க்க மூலம் யாதென் றுலகம் ஒது கின்றது? ஆதி அருகன் ஒதினன் மூலம்; அகிம்சை மேலாம் அறமென முதன்முதல் அருளிய பெருமை அருகனுக் குண்டே’ அகிம்சை உயிர்ப்பை அளித்த ஐயன், சீலப் போர்வையும் சால அமைத்தனன் சீலம் வளர்வழி கோலினன், அதுவே மிகுபொருள் விரும்பா மேன்மை ஒழுக்கம்: மிகுபொருள் விரும்பாத் தகுதி இடத்தில் அகிம்சா தர்மம் ஆடல் புரியும்; மிகுபொருள் விரும்பும் விலங்குள இடத்தில் அகிம்சை அகலும் புகுங்கொலை களவு: மிகுபொருள் விரும்பாத் தகுதி, அகிம்சைஉண்மை-சீலம்-ஒழுக்கம்-காக்கும்; பொருளின் நிலைக்கும் அருளின் நிலைக்கும் உற்றுள தொடர்பை உற்று நோக்குகள் பொருளொரு பாலே பெருகிச் செல்லின் கொலைபுலை. களவு குலைக்கும் உயிரை: பொதுமை பொதுமை பொதுமை என்றே பட்டினி பசியும் நெட்டிக் கூவும்: அருகன் மொழிந்த அருளற வழியே, புதுமை முயற்சியால் பொதுமை மலர்கள் மூர்க்கப் புரட்சியால் முளைக்கும் பொதுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/46&oldid=695563" இலிருந்து மீள்விக்கப்பட்டது