பக்கம்:திரு. வி. க.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்நூலாசிரியர் குறித்து திரு. வி.க. அவர்கள் கருத்து

ஞானசம்பந்தர்

சரவண முதலியார் ஒரு சைவத் தமிழ்க் கடல். அக்கடலினின்றும் பிறந்த கற்பகம் ஞான சம்பந்தம். ஞானசம்பந்தர் கலைஞர்; பல திறப் பொருள் பற்றியும் பேசுவர். எழுதுவர். அதனால்

அவரைக் கற்பகம் என்கிறேன்.

ஞானசம்பந்தர் பேச்சு: தமிழ்ப் பேச்சு. அப் பேச்சுக்களிடைச் சீர்திருத்தம் நுழையும். அஃது எனக்கு மகிழ்ச்சியூட்டும். ஞானசம்பந்தர் இயற்கையில் விஞ்ஞானி. அவர் தம் தந்தையார் விரும்பியவாறு தமிழ் எடுத்தார் என்று கேள்வியுற்றேன்; சிறிது வருந்தினேன். தமிழ் மீது எனக்கு எவ்விதக் காழ்ப்புமில்லை. ஞான சம்பந்தர் தமிழில் பட்டம் பெறவேண்டுவ தில்லை.

ஞானசம்பந்தர் உள்ளம் பளிங்கு. அவர் உள்ளத்தில் மறைப்பே கிடையாது.

ஞானசம்பந்தர் என் தலைமையில் பல திறப்பொருள் பற்றிப் பேசியுள்ளார். அவற்றுள் சிறப்பாகக் குறிக்கத்தக்கது திருவாசகத்தைப் பற்றியது. திருவாசகத்தை அவர் விஞ்ஞானக் கண்கொண்டு பார்க்கிறார். சீர்திருத்த உள்ளங் கொண்டு நோக்குகிறார்; அக்கால மாணிக்க வாசகரை இக் காலத்தவராகக் காட்டுகிறார். ஞானசம்பந்தர் வாயிலாகத் திருவாசகத்துக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/5&oldid=695567" இலிருந்து மீள்விக்கப்பட்டது