பக்கம்:திரு. வி. க.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 அ.ச. ஞானசம்பந்தன்

இல்லாதவர் என்றும் கற நேரிடும். எத்தகைய பெரியாராயினும் பெயர்ச் சீட்டு ஒட்டிக் குப்பியில் அடைக்கும் நம் பழைய வழக்கத்தை ஒட்டித் திரு. வி.கவைச் சிறைப்படுத்தவேண்டா. இவர்தாம் முனிவர்

இவை அனைத்திலும் நுழைந்து, இவை அனைத்தையும் ஏற்றுக்கொண்டு, இவை அனைத்தையுங் கடந்து நிற்கும் தமிழர் ஒருவர் உளர் என்றால், இவை அனைத்தையும் ஒற்றுமைப்படுத்திக் காணும் நற்பழக்கத்தைத் தமிழ் மொழிக்கும் தமிழ் இலக்கியத்திற்கும் சிந்திக்கும் திறனுடைய தமிழனுக்கும் தந்தவர் ஒருவர் உளர் என்றால், அவர்தாம் இராயப்பேட்டைத் தவமுனிவர் திரு. வி.க. முனிவர் என்று கூறியவுடன், காட்டிற் சென்று கனசடை வைத்து, உலகம் மாயை, பெண் என்பவள் பேய், பொறிபுலன்களை அடக்கவேண்டும் என்று கூறும் ஒருவர் நம் மனக்கண்முன் தோன்றுதல் இயல்பு. ஆனால், இந்த முனிவர் இல்லறத்தே வாழ்ந்து ஒரு குழந்தைக்கும் தந்தையாக விளங்கினார். ‘பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை’ என்ற நூலும் எழுதினார். பொறி புலன்களை அடக்க வேண்டும் என்பதன் எதிரே அவற்றிற்கு உரிமை தந்து நன்கு அனுபவிக்க வேண்டும் என்று கூறும் இவர் ‘முருகன் அல்லது அழகு என்ற நூலையும் எழுதினார். எனவே, இவர் ஒரு தனிப்பட்ட வகையான முனிவர் என்பது விளங்கும்.

தன்னலம் கருதா முனிவர் r

முனிவர் என்பவர் காமம், கோபம் முதலியவற்றை முனிந்தவர்களே தவிர நாட்டையும் வீட்டையும் முனிந்த வர்களல்லர். இன்னுங் கூறவேண்டுமானால், தம்முடைய பொறி புலன்கள் மேல் நம்பிக்கையற்றுக் காட்டில் சென்று தவஞ் செய்யும் முனிவர்களானவர்களுங்கூட ஒரு மேனகை யைக் கண்டு தவத்தை இழந்தார்கள் என்று படிக்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/52&oldid=695570" இலிருந்து மீள்விக்கப்பட்டது