பக்கம்:திரு. வி. க.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 49

நகர்தலுஞ் செய்யாது. கூர்மம் (ஆமை) சிறுகால் கொண்டு ஊர்ந்து செல்வது. வராகம் நன்றாக நடக்கவல்லது. நரசிம்மம், விலங்கினமும் மனித உருவும் கலந்தது. மனிதத் தோற்றத்துக்குக் கால்கொண்ட இடம் இதுவே. பின்னே வாமனன் தோன்றினன். வாமனன் மனிதனாயினும் அவன் முதலில் தோன்றின வனாதலின், அவன்பால் மனிதப் பிறவிக்குரிய முழுமை விளங்கவில்லை. அவன் குறளனாகவே இருந்தான். பரசுராமன் முழு மனிதன்; ஆனால், சாந்த மில்லாதவன். ஸ்ரீ ராமன் அழகன்; சாந்தமுடையவன்; ஒவ்வொருபோது பூர்வ ஞானமுடையவனாயிருந்தவன். கண்ணன் மனித உடலும் தெய்வ நிலையும் உடையவன்; எப்பொழுதும் பூர்வ ஞான முடையவனாயிருந்தவன்”

இக் கருத்துக்களிலிருந்து நாம் அறிவது ஒன்றுண்டு. திரு. வி.க.வின் கருத்துப்படி இந் நாட்டுப் பழங்கால அறிஞர்கள் தம் நுண்மான் நுழைபுல உதவியால் இக்கால விஞ்ஞானிகள் கண்டளித்த பேருண்மைகளையே கண்டு எழுதிப் போந்தனர். ஆனால், இக் காலம்போல விஞ்ஞான ரீதியில் விளக்கம் தராமல் கதைகளாகவே எழுதிப் போயினர். அவ்வாறானால் மனிதனின் வளர்ச்சியைக் கூற வேண்டிய வர்கள் திருமாலின் அவதாரங்கள் இவை என்று கூற வேண்டிய இன்றியமையாது என்ற வினாவிற்கும் பெரியார் விடை நல்குகிறார். முன்னர்க் கூறிய அதே நூலில் அதே பகுதியைத் தொடர்ந்து இதனை விளக்குகிறார்.

“இவ்வவதாரம் ஒவ்வொன்றும் உயிர் வளர்ச்சி யின் ஒவ்வொரு நிலையை உணர்த்துவது. இந்நிலையை நம்மவர் கற்பம் என்பவர். உயிர் வர்க்கம்

‘தமிழ்நாடும் நம்மாழ்வாரும், பக்கம் 51, 52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/59&oldid=695577" இலிருந்து மீள்விக்கப்பட்டது