பக்கம்:திரு. வி. க.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 இல் அச. ஞானசம்பந்தன்

மீனாயிருந்தது ஒரு கற்பம்; ஆமையானது மற்றொரு கற்பம்; இவ்வாறே பிறவும்.

அவதாரங்களை இறைவன்மீது ஏற்றுவது என்னை? இஃது உன்னத்தக்கது. உயிர்கட்கு அறியா மைக் கட்டு உண்டு. அதனால் அவைகட்கு இயல்பில் அறிவு விளங்குவதில்லை. அறிவு விளக்கத்துக்கென அவை மாயா உடலங்களைத் தாங்குகின்றன. அறியாமையால் கட்டுண்டு கிடக்கும் உயிர்கள், தாங்களே மாயா உடலங்களை எங்ஙனம் தாங்க வல்லனவாகும்? இதற்கு ஒரு துணை இன்றியமையாத தாகிறது. அத் துணை, அறியாமைக் கட்டில்லாத தாயிருத்தல் வேண்டும். அப்பொழுதே அஃது அறியாமைக் கட்டுடைய உயிர்கட்குத் துணை செய்யவல்லதாகும். அறியாமைக் கட்டில்லா ஒன்றே சித் என்னும் செம்பொருள். அச் சித் எங்கும் நிறைந்தது, எல்லாவற்றிற்கும் வித்தாய் இருப்பது. அஃது உயிர்களின் உள்ளும் புறமும் நின்று, அவை மாயா உடலங்களைத் தாங்கத் துணை செய்கிறது. அத்துணையின்றி உயிர்கள் மாயா உடலங்களைத் தாங்குதல் அரிது. இதனால் துணையின் பெருமை விளங்குதல் காண்க. சித் என்னுஞ் செம்பொருளின் துணையால், எல்லாம் நிகழ்வதால், எந் நிகழ்ச்சியையும் அதன்பாற்படுத்திச் சொல்வது ஒருவித DDr. அம்மரபுபற்றிப் புராணங்கள் அவதாரங்களை ஆண்டவன்பாற் படுத்தினபோலும். இம் முறையில் அவதார நுட்பம் எனக்கு விளங்குகிறது. அக்கண்ணுங் கருத்துங் கொண்டு ஆழ்வார் கூறிய அவதாரங்களை நோக்குகிறேன். யான் மனிதன்; குறையுடையவன்.”

  • தமிழ்நாடும் நம்மாழ்வாரும் பக்கம் 52, 53.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/60&oldid=695579" இலிருந்து மீள்விக்கப்பட்டது