பக்கம்:திரு. வி. க.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. 51

இத் தருணத்தில் பெரியாரவர்கள் எழுதிய ‘என் கடன் பணிசெய்து கிடப்பதே என்ற நூலில் கூறியுள்ள ஒரு பகுதியை அப்படியே இவண் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

மேலைநாட்டு நாத்திக நூல்கள் பல, கீழை நாட்டு ஆத்திக நூல்களுக்கு ஆக்கந் தேடுவன என்பது எனது அநுபவத்திற் கண்ட உண்மை. மேலைநாட்டு நாத்திகப் பெரியோர் புறப்பொருளை ஆராய்ந்து கண்ட உண்மையை ஆதாரமாகக் கொண்டு, அவர் பின் வந்தார் சிலர், அதை ஆராய்ச்சி செய்து, இப்பொழுது சடப்பொருளுக்கு வேறாக ஒரு சித்துப் பொருளுண்டு என்னும் முடிவிற்கு வந்திருக்கின்றனர். பூதபெளதிக தத்துவ நூலில் தேர்ச்சி பெற்ற ஸர் ஒவியர் லாட்ஜ் முதலியோர், கண்ணுக்குப் புலனாகுஞ் சடப் பொருளுக்கு வேறாக மற்றுமொரு பொருள் இருத் தலை நிறுவிக் காட்டியிருக்கின்றனர்”.

விஞ்ஞானம் சமயத்தின் பகையா

இதில் வியப்பு என்ன எனின், விஞ்ஞானப் புதுமைகள் தோன்றிய மேனாட்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இவ் விஞ்ஞான அறிவு சமயக் கொள்கைகளை அழித்து ஒழித்துவிடும் என நம்பினர். ஆனால், நம்முடைய நாட்டில் தோன்றிய இப்பெரியார் இவை நம் பழங் கொள்கைகட்கு அரண் செய்யும் எனக் கருதினார். கருதின அளவில் நிற்காமல் மேலும் மேலும் உண்மையைக் காண இவற்றின் துணையை நாடி நின்றார். நம்முடைய சமயத்தை மட்டும் ஆய்வதுடன் இவர் நின்றுவிடவில்லை. இதோ நம் வாழ்க்கைக் குறிப்பில் தாம் செய்த ஆராய்ச்சிகள் பற்றிக் கூறுகிறார். r

என் கடன் பணிசெய்து கிடப்பதே, பக்கம் 18.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/61&oldid=695580" இலிருந்து மீள்விக்கப்பட்டது