பக்கம்:திரு. வி. க.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அச. ஞானசம்பந்தன்

நமது நாட்டுப் புராணங்கள் சில இவ்வுண்மையை ஒருவாறு கதைகள் வடிவாக அறிவுறுத்துகின்றன. புராண நூல்களில் பல இடங்களில் திருமாலின் பத்துப் பிறவிகள் சொல்லப்படுகின்றன. கூர்தல் அல்லது உள்ளது சிறத்தல் (Evolution) முறை பற்றி அப்பத்தையும் உற்று நோக்கின், படிப்படியாக உயிர்களின் பிறவி வளர்ச்சி புலனாகும். நம் நாட்டுப் பெளராணிகர்கள் பெரிய ஹெக்கல்கள், டார்வின்கள் போலும்! -

விலங்கினின்றும் பிறந்த மகனுக்குத் தொடக்கத் தில் பலதிற விலங்குக் கூறுகளிருந்தன. அவற்றுள் ஒன்று பல். அந்நாளைய மகனுக்குக் கூரிய வாளனைய கோரைப் பற்கதளிருந்தன. அப்பல் நாளடைவில் தேய்ந்து தேய்ந்து இப்பொழுதுள்ள நிலையை அடைந்திருக்கிறது. கோரைப் பல்லினின்றுந் தேய்வுற்ற அப் பல்லுக்கு இன்னும் நாய்ப் பல் என்னும் வழக்கிருத்தலை ஒர்க. கோரைப் பல்லெனும் விலங்குப் பல்லுடைய பாவைகள் இன்னுங் கோயில்களில் நின்று கொண்டிருக்கின்றன. அவை நமது மூதாதைகளின் நினைவு குறிகளாகும்.

விலங்கினின்றும் பிறந்த மகனுக்குக் கடவுள் உணர் வெனும் அன்பு நெறி உடனே விளங்கியிராது. பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குக் கடவுள் உணர்வு தோன்றியிருக்கும். எப்போது அவ்வுணர்வு தோன்றியிருக்கலாம்?

நீண்ட கோரைப்பல் விலங்குணர்விற்கு அறிகுறி. அஃதிருந்த மட்டும் மகனுக்குக் கடவுள் உணர்வு தோன்றியிராது. பல்லுக்கும் குடலின் உள்ஸ்ரீப்புச் சிலவற்றிற்கும், மூளைக்குந் தொடர்புண்டு. பல் தேயும் அளவினதாக உள்ஸ்ரீப்புகளுந் தேயும். அவ்வுறுப்புகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/68&oldid=695587" இலிருந்து மீள்விக்கப்பட்டது