பக்கம்:திரு. வி. க.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. * 31

கடவுட்டன்மை ஆகிய இயல்புகளைக் கொண்ட ஒன்றைப் பண்டைத்தமிழ் மக்கள் முருகு என்னுஞ் சொல்லால் அழைத்துப் போற்றினார்கள், முருகு என்பது பொருள் பொதிந்த ஒரு சொல். அம்முருகை யுடையவன் முருகன்.”* இயற்கை பற்றி அறிதல்

r. மனிதனின் இயற்கை ஈடுபாடே அவனைக் கடவுட் பொருள்பற்றிச் சிந்திக்கத் துண்டியது. இந்த இயற்கையைப் படைத்ததன் மூலமே கடவுள் உயிர்களைப் புரக்கின்றான் என்ற உண்மை நாளாவட்டத்தில் மனிதனுக்குப் புலனா யிற்று. இயற்கையைக் கண்டு அஞ்சிய மனிதன், பின்னர் அதன் உதவியாலேயே தன் வாழ்வு நடைபெறுகிறது என்பதைக் கண்டுகொண்டான். அடுத்து அதன் மாட்டு அன்பு செலுத்தவும் அதன் அழகில் ஈடுபடவும் கற்றுக் கொண்டான். மலை முதலிய இயற்கைப் படைப்பில் அழகு உள்ளது என்று கருதியது போக, அவையே அழகு என்பதையும் அறியத் தொடங்கினான். பொருளினிடத்து அழகிற்காக ஈடுபட்ட மனிதன் அதனிடம் உள்ள அழகு மாறாதது என்பதையும் அறிந்து கொண்டான். இந்த அற்புத இயற்கை தன் பொருட்டாகவே உளது என்பதையும் அறிந்த பிறகு, இத்தகைய ஒன்றைத் தன் பொருட்டு ஆக்கித் தந்த தலைவன் ஒருவன் இருத்தல் வேண்டும் என்ற எண்ணம் உதிக்கலாயிற்று. எல்லையற்ற பரம்பொருளின் அடையாளமாய், அப்பொருளின் அழகை எடுத்துக்காட்டும் கண்ணாடியாய் இயற்கை அமைந்திருப்பதைக் கண்டான். . நியதியிலடங்கிய இயற்கை

இதனையடுத்து, இயற்கை மூலம் தான் பெற்றுவரும் துணை, இயற்கை தனக்கு நேரே நல்குகிறதா, அன்றி அந்த

அதே நூல், பக்கம் 33, 34.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/71&oldid=695591" இலிருந்து மீள்விக்கப்பட்டது