பக்கம்:திரு. வி. க.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இ. அச. ஞானசம்பந்தன்

இயற்கையின் உள்ளுறை பொருளாய் இருக்கும் இறையி னுடையதா என்பதையும் ஆய்ந்தான் என்றும் அழகையே நல்கும் இயற்கை மாறிமாறித் தோன்றி மறைந்துவரும் சூழ்நிலையையும் மனிதன் கண்டான். விண்ணினை அண்ணாந்து பார்த்த மனிதனுக்கு, அங்குள்ள கோள்களும் மீன்களும் ஒரு நியதியை ஒட்டியே சென்று வருகின்றன என்ற உண்மை புலப்படலாயிற்று. அதே போன்று மலர்களும் காய்களும் ஒரு நியதியை ஒட்டியே தோன்றி மறைகின்றன என்பதையும் அறிய முடிந்தது. தன்னைச் சுற்றியுள்ள இயற்கை முழுவதிலும் ஒரு நியதி இருப்பதை அறிந்த மனிதன், இவை நியதிக்குக் கட்டுப்பட்டு நடக்கின்றன என்று அறிந்த பிறகு, இந்த நியதியை வகுத்தவன் ஒருவன் இருத்தல் வேண்டும் என்பதை உணர அதிக காலம் செல்லவில்லை.

இறையுணர்வு

ஆதிமனிதன் இறையுணர்வைப் பெற்றது இயற்கையி லிருந்துதான் என்பதைத் திரு.வி.க. தெள்ளத் தெளிய எடுத்துக் காட்டுகிறார். மிகப் பழைய காலத்தையே மலையில் வாழ்ந்த மனிதன் இயற்கையின் அழகைக் கண்டு அதிலீடுபட்டு இயற்கை தோற்றுவிக்கும் புற அழகின் அடிப்படையில் இலங்குவது மாறாத அழகு என்ற உண்மையைக் கண்டு அதற்கு முருகு’ எனப் பெயர்ந்தான். பிற்காலத்தில் தோன்றிய அடியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள் ஆகிய அனைவரும் இறைவனைப்பற்றிப் பாடும்போதெல்லாம் இயற்கையின் வடிவமாக அவன் அமைந்திருப்பதையும், அதனையும் கடந்து அவன் விளங்குவதையுமே பாடிச் சென்றனர். இயற்கை வழிபாடே இறைவன் வழிபாடாக அன்று கருதப் பெற்றது. இதுபற்றித் திரு.வி.க. அவர்கள் ‘தமிழ்நாடும் நம்மாழ்வாரும் என்ற நூலில் இவ்வாறு குறிக்கிறார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/72&oldid=695592" இலிருந்து மீள்விக்கப்பட்டது