பக்கம்:திரு. வி. க.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 இ. அக ஞானசம்பந்தன்

சொற்புலவோர் இயற்கைக் கூறுகளை வருணிப் பது வழக்கம். அவர்கள் பாக்களில் சொற்களைக் காணலாம்; பொருள்களைக் காண்டல் அரிது. நம்மாழ் வார் பாக்களிலோ பொருள்கள் பொலிகின்றன. அப் பொருட்கண் அறிவு செறிந்து, அன்பு நிறைந்து, இன்பம் பிலிற்றுகிறது. இவ்வுண்மை என்னை? நம்மாழ் வாரை அடைவோம்.

நம்மாழ்வார்-பூ ஞாயிறு, திங்கள், மலை முதலியவற்றை அவ்வப் பொருள் வடிவாகப் புறக் கண்களால் மாத்திரங் கண்டு, அவற்றைப் பாக்களாகப் பாடினாரில்லை. அப் பொருள்களின் ஊடே கலந்துள்ள ஓர் அகண்டாகாரப் பேரறிவை ஆழ்வார் தமது அகக் கண்ணால் கண்டு, அதனைப் பாக்களாகப் பாடினார் என்பது தெரியவருகிறது. அக்காட்சி முதிர்ச்சியால், தமது அகத்துள்ள அறிவும், புறத்துள்ள அறிவும், ஒன்றுபட்டு ஊற்றிய இன்பக் குழம்பே ஆழ்வார் பாக்கள் என்னலாம். ஆழ்வார் கொண்ட பூவும், ஞாயிறும், திங்களும், பிறவும் ஆண்டவன் வடிவங்கள். அவர் பூ முதலியவற்றை இறைவனாகவே வழிபட்டுப் பாக்களை அருளினார். நம்மாழ்வார் இயற்கை வாயிலாகக் கடவுளைக் கண்டு, அக்கடவுள் தம்முள்ளத்துள்ள செம்பொருள் என்பதை உணர்ந்து, எல்லாம். கடவுள் மயம் என்னும் உண்மையை உலகுக்கு அறிவுறுத்திய பாக்கள் பல.”

அழகு எங்கே உள்ளது? -

அடியார்களும் ஆழ்வார்களும் இயற்கையை இறைவ னுடைய அட்டமூர்த்தமாகவே கருதி வழிபடக் காரணம் என்னை? ஆதி மனிதனில் தொடங்கி இன்றளவும் மனிதன்

தமிழ்நாடும் நம்மாழ்வாரும் பக்கம் 22, 23, 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/74&oldid=695594" இலிருந்து மீள்விக்கப்பட்டது