பக்கம்:திரு. வி. க.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66. இ. அ.ச. ஞானசம்பந்தன்

தில்லை. “உள்ளதற்குத்தான் தோற்றமுண்டே தவிர இல்ல தற்குத் தோற்றம் இல்லை” என்பது இந்நாட்டார் கூறிய அளவையாகும். அழகிலிருந்து அரும்பிக் காட்சி அளிப்பது இயற்கை எனலாம். உயிருடன் உடல் காட்சியளிக்கிறது. இவ்வுடல் அழிந்து மாறினும் உயிர் கேடுறுவதில்லை. அதே போன்று இயற்கை வடிவங்கள் மாறினும் உள்ளே உறையும் அழகு என்றும் அழியாததாய்ப் புதுப்புது வடிவம் தாங்கி நிற்கிறது. அழகின் இத் தன்மையைக் கண்டே நம் முன்னோர் அழகை இறைவனுடன் தொடர்புபடுத்தி முருகன்’ என்று பெயரிட்டனர் போலும். பழந்தமிழர் தாம் தொழுத கடவுளை அழகுப் பொருளாகவே கொண்டனர் என்பதற்குப் பல சான்றுகள் உள. அச்சான்றுகள் இரண் டொன்று வருமாறு:

“தமிழ் பிறந்த இடமும், தமிழ் வளர்த்த குறுமுனி வாழ்ந்த இடமும், தமிழ்ச் சங்கம் மருவிய இடமும் பாண்டிநாடு என்று சொல்லப்படுகிறது. அப்பாண்டி நாட்டுப் பழைய மக்கள் தங்கள் ஆவலாய் அவிர்சடைக் கடவுளைச் சொக்கன் என்னும் பெயரால் வழிபட்டார்கள். (அச்சொக்கன் பின்னைச் சுந்தரேசனானான்)

சொக்கன் என்னுஞ் சொல்லுக்குரிய பொரு ளென்ன? முழு அழகன்-பேரழகன் என்பது.

பாண்டி நாட்டில் சிறப்புற்று விளங்கும் மற்றொரு பழம்பதியாகிய திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியுள்ள கடவுளைத் தமிழ் மக்கள் அழகன என்று போற்றியுருத்தலையுங் காண்க.”*

என்று திரு.வி.க. கூறிச் செல்கிறார்.

  • முருகன் அல்லது அழகு, பக்கம் 24.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/76&oldid=695596" இலிருந்து மீள்விக்கப்பட்டது