பக்கம்:திரு. வி. க.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 அச. ஞானசம்பந்தன்

பயனற்ற ஒன்றைப் படைப்பது அறிவுடையோன் செயலன்று; முற்றறிவினனாய இறைவன் மட்டும் இவ்விதிக்கு விலக்காமாறு யாங்ஙனம்? அடியவர் கண்ட இயற்கை

இந்த நாட்டில் தோன்றிய அடியவர்கள் யாவரும் இயற்கை அழகில் ஈடுபட்டு அந்த அழகில் இறைவனைக் காண முயன்றனர். திருமுருகாற்றுப்படைக்காரர் ‘உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர் புகழ் ஞாயிறைக் கடலின் விளிம்பில் கண்டு தம்மை மறந்து அந்த அழகு கைபுனைந்து இயற்றாக் கவின் பெருவனப்பாக அமைவதைப் பாடுகிறார். கேதாரம் சென்ற திருஞான சம்பந்தர், வண்டு பாட, மயிலாட, மான்கன்று துள்ள, வரிக் கெண்டை பாய, சுனை நீலம் மொட்டலரும் கேதாரத்தைக் கர்ண்கிறார். வண்டின் பாட்டையும், மயிலின் ஆட்டத்தையும், மான்கன்றின் துள்ளலையும் மட்டும் அவர் காணவில்லை. அந்தப் பாடல், ஆடல், துள்ளல் இவற்றின் அழகோடு அவற்றின் அடிப்படையில் இறைவனைக் காண்கிறார். ஒசையிலும், ஆட்டத்திலும், துள்ளலிலும், அழகிலும் இறைவனையே காணும் சிறப்பையுடைய இப் பெருமக்கள் இயற்கையையும் அதன் அழகையும் காணும்போது, அவற்றின் ஊடே எங்கும் நிறைந்து நீக்கமற நிற்கின்ற முழுமுதற் பொருளைக் காண்கின்றனர். இறைவன் அங்கு இங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் இருப்பவன் என்று கூறிவிட்ட பிறகு ஒருசிலவற்றை ஒதுக்குதல் எவ்வாறு முடியும்: இசை, நடனம் முதலியனவும் இயற்கையே

இயற்கையை இறைவனாகவே காணும் பேறு பெற்ற வர்கள் அந்த இயற்கையின் பிரதிபலிப்பாக அமையும் ஒவியத்தையும், இயற்கையில் யாண்டும் காணப்பெறும் நடனத்தையும், இயற்கை தோற்றுவிக்கும் இசையையும் எங்ஙனம் ஒதுக்கிவிட முடியும்? இவற்றையெல்லாம் ஒதுக்கித்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/78&oldid=695598" இலிருந்து மீள்விக்கப்பட்டது