பக்கம்:திரு. வி. க.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 & அச. ஞானசம்பந்தன்

இயற்கையைப் பாட இயலாதார் இயற்கைப் புலவர் பாடிய பாடல்களைப் பொருளுணர்ந்து ஓதி, இயற்கை இன்பத்தில் திளைப்பாராக. இதுவும் முருகன் வழி பாடாகும்.

உலகில் பல இடங்களில் பல புலவர் தம் தம் மொழியில் இயற்கையைப் பாட்டோவியமாக எழுதி யிருக்கிறார். நம் தமிழ்ப் புலவரும் இயற்கைப் படம் பல வரைந்து நமக்கு உதவியுள்ளனர். அப் படங்கள் பல்லாயிரக் கணக்காகக் கடலெனப் பெருகிக் கிடக்கின்றன. அக் கடலினின்றும் இரண்டொரு துளி எடுத்துச் சொட்டுகிறேன்:

‘திசைமுகம் பசந்து செம்ம்லர்க் கண்கள் முழுநீர் வார முழுமெயும் பணித்துத் திரைநீ ராடை யிருநில மடந்தை யரசுகெடுத் தலம்வரு மல்லற் காலை’

இஃது இளங்கோ வரைந்த அந்திவான ஒவியம்:

எது புலனடக்கம்? - - - இறைவனை இயற்கை வடிவாகவும், ஒவியமாகவும், கவிதையாகவும் போற்றினர் நம் முன்னோர் எனில், பொறி புலன்கட்கு முழு உரிமை தந்தனர் என்றுதானே கொள்ளல் வேண்டும்? ஆனால், புலனடக்கம் வேண்டும் என்று பல பெரியோர் கூறியிருக்கின்றனரே என்ற வினாவை எழுப்பி அழகாக விடை இறுக்கின்றார் தமிழ்ப் பெரியார். புலனடக்கம் என்பது புலன்களை அறவே பயனற்றுப் போம்படி அழிப்பது என்பது பொருளன்று. புலனடக்கம் என்ற சொல்லே செம்மையான பொருளைத் தந்து நிற்கின்றது. அடக்கம் வேறு; அழிவு வேறு. அடக்கம் என்பது

  • முருகன் அல்லது அழகு, பக்கம் 47, 48, 49
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/82&oldid=695603" இலிருந்து மீள்விக்கப்பட்டது