பக்கம்:திரு. வி. க.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 : அச. ஞானசம்பந்தன்

தொட்டே நம் தமிழர் கூறி வந்துள்ளனர். மாநிலம் சேவடியாக, தூநீர் வளைநரல் பெளவம் உடுக்கையாக, இயன்ற எல்லாம் பயின்று அகத்தடக்கி என்று சங்கப் புலவன் கடவுள் வாழ்த்துப் பாடுகிறான். இவை அனைத் தையும்விட வியக்கத்தகும் ஒன்றையும் இத் தமிழ் மக்கள் கண்டு கூறினர். இறைவனைக் கருணைக் கடல் என்றும் மேலுலகில் இருப்பவன் என்றும் பிற சமயிகள் கூறினமையின், நரகம், துன்பம் என்பவற்றை அவன் படைக்க வில்லை என்று கூற வேண்டிய நிலையை அடைந்தனர். இக் கருத்தை வளர்த்துக்கொண்டு சென்று நரகின் தலைவனான ஒருவனை நியமித்தனர். அந்த இடத்தை இறைவன் ஆணை செல்லாத இடமாக ஆக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டது. இவ்வாறு கூறுவதால் இறைவனுடைய சர்வ வியாபகத்துக்கும் சர்வ சக்திக்கும் குறை நேருகிறதே என்பதைக்கூட அவர்கள் கருதவில்லை.

அனைத்தும் அவனே

ஆனால், இத் தமிழ் மக்கள். அனைத்தும் அவனே என்று கூறிவிட்ட பிறகு, நரகு என்ற ஒன்று இருப்பின் அதுவும் அவனே என்று கூறினர் நன்மை, குற்றம் என்பவையும் அவனே என்று கூறிவிட்டனர்.

“யானும்நீ தானே யாவதோ மெய்யே

அருநரகு அவையும்நீ ஆனால் வானுயர் இன்பம் எய்தின் என்? மற்றை

நரகமே எய்தின் என்?”

என்று நம்மாழ்வாரும்

“குற்றம் நீ! குணங்கள் நீ! கூடல் ஆலவாயிலாய்!”

என்று ஞானசம்பந்தரும் பாடியுள்ளனர். ஆனால், உடன் பாட்டு முகத்தால் இவன் இத்தகையவன் என்று கூறினாலும் இடர்ப்பாடு நேரும். குணங் குறி கடந்த ஒன்றைக் குறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/86&oldid=695607" இலிருந்து மீள்விக்கப்பட்டது