பக்கம்:திரு. வி. க.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vii

பழம்பொருளாகிய தமிழ்மொழிமூலம் பின்னைப் புதுமைக்கும் புதுமையானதாகிய சமதர்மக் கொள்கையை எடுத்து அலசி ஆய்ந்து விளக்க முடியும் என்பதைத் தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு எடுத்துக் காட்டிய பெரியவர் திரு. வி.க. புத்தம் புதிய அரசியல் கருத்துக்களை முழு ஆவேசத்துடன் பேசி மக்களைத் தட்டி எழுப்பவேண்டுமானால் அஃது ஆங்கிலத்தின் மூலமே இயலும் என்று கருதிய காலத்தில் இந்த இராயப்பேட்டை முனிவர் ஆங்கிலம் ஒரு

சொல்கூடக் கலக்காமல் ஆங்கிலப் பேச்சாளர்கள் எழுப்பிய உணர்ச்சியைக் காட்டிலும் மிகுதியாக எழுப்பினார்.

அரசியலில்கூடச் சமயத்தையும் சமரசத்தையும் கலந்தே வழங்கினார்.

தொழிலாளர் இயக்கம் என்ற ஒன்று, இந்தியாவைப் பொறுத்த மட்டில், கேள்விக் குறியாக மட்டுமே இருந்து வந்தது. அத்தகைய ஒன்றை நடைமுறையில் கொணர்ந்து, அகில இந்தியாவிலும் தமிழ்நாட்டில்தான் முதல் முதலில் சீரிய முறையில் தொழிற் சங்கம் ஏற்பட்டது என்ற பெருமையைத் தமிழர்க்குத் தேடித் தந்த பெருமையுடையார் திரு. வி.க.

இங்ஙனம் பல்வேறு துறைகளில் புகுந்து புறப்பட்டும், தாம் புகுந்த துறை அனைத்தையும் பொன்மயமாக்கியும், இவை ஒன்றினும் முற்றிலும் படாமல் தாமரை இலைத் தண்ணிர் போல் வாழ்ந்து, வாழ்க்கையின் பயனைப் பெற்ற இப் பெரியாரோடு நெருங்கிப் பழகிய காரணத்தால் அன்னாருடைய நூல்கட்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/9&oldid=695611" இலிருந்து மீள்விக்கப்பட்டது