பக்கம்:திரு. வி. க.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-82 இ. அச. ஞானசம்பந்தன்

“ஒரே உண்மையைக் காலமிடங்களுக்கேற்ற வண்ணம் பலவாறு அறிஞர் வாயிலாக ஆண்டவரே அறிவுறுத்துகிறான் என்னும் உண்மையில் உறுதியுடை யார், எவரையும் எக் கொள்கையையுங் குறை கூறார்:

இதனையடுத்துப் பெரியார் கூறுவதும் சிந்திக்கற் பாலாது:

“இவைகட்கு மெய்கண்ட சாத்திரமென்னும் பொதுப் பெயர் வழங்கிவருகிறது. இது வேதாந்த ஆராய்ச்சியில் நேர்ந்த பிணக்குகளை ஒழிக்க எழுந்த சித்தாந்த நூலென்பது.

வேதாந்தத் தெளிவாஞ் சைவ சித்தாந்தத் திறனிங்குத் தெரிக்க லுற்றாம்’

என வரும் உமாபதி சிவத்தின் திருவாக்கான் வலியுறுத்தப் படுதல் காண்க

தன்னந்தனியராய்த் தமிழ் மக்கள் கண்ட சமயம், முதன் முதல் சமணம், பெளத்தம் முதலிய சமயங் களோடு கூட்டுறவு கொண்டு, பின் வடமொழிக் கலைகளோடு நட்புப் பெற்று, ஏகான்ம வாதம் முதலிய சமயங்களோடு உறவாடி, முடிவில் மெய்கண்டார் வழிச் சித்தாந்த உருவடைந்து, உலகில் அருணெறியாகி வளர்ந்து வருகிறது.

இனி மெய்கண்ட சாத்திரம் தற்போதைய உலகம் விரும்பும் சமரச ஞானத்தை எவ்வளவில் தழுவி நிற்கிறது என்பதைச் சிறிது ஆராய்வோம். மெய் கண்ட சாத்திரம் தத்துவம் முப்பத்தாறையும் பொரு ளாகக் கொண்டிருக்கிறது. (முப்பத்தாறின் விரிவு தொண்ணுாற்றாறு; விளக்கம் தத்துவக் கட்டளைகளிற்

‘சைவத்தின் சமரசம், பக்கம், 35.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/92&oldid=695614" இலிருந்து மீள்விக்கப்பட்டது