பக்கம்:திரு. வி. க.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 87

சாதிப் பூசல், சாதிக் கூட்டம், சாதிப்பற்று முதலிய கொடுமைகளே நடம்புரிகின்றன. நாயன்மார் காலத்தில் தற்கால நாகரிகம் பரவியிருக்கவில்லை. ஆனால், அக்காலத்தில் சாதி பேதத்தால் நிந்தையாதல், பகைமையாதல், பிறவாதல் மூண்டு கனன்றெழ வில்லை. அக்காலம் நாகரிக காலமோ? இக்காலம் நாகரிக காலமோ? உண்மையை அறிஞர்கள் ஆராய் Isrs Toof; fro.

அந்தணர் பெருமானாகிய சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகையில் எல்லாச் சாதியாரையும் அடியார்க்கும் அடியேன்” என்று வழுத்தியிருக்கிறார். திருநாவுக்கரசு சுவாமிகள்.

‘சாத்தி ரம்பல பேசுஞ் சழக்கர்காள் கோத்தி ரமுங்குல முங்கொண் டேன்செய்வீர் பாத்தி ரஞ்சிவ மென்று பணிதிரேல் மாத்தி ரைக்குள் அருளு மாற்பேறரே’

என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். வேறு பல நாயன்மாரும் சாதிபேதத்தை மறுத்தோதியிருக்கிறார். நாயன்மார் காலத்தில் சாதி வேற்றுமையிருந்தும், அதைக் கருதாது, அவர் அன்பின்வழி நின்று ஒழுகியது போல, இக் காலத்தும் அவர்தம் வழித்தோன்றிய தமிழ் மக்கள் சாதியில் கருத்தைச் செலுத்தாது, அன்பு நெறி பற்றித் தொண்டு செய்ய முயல்வார்களாக”

திருக்கோயில் நிலை

இந்தச் சாதி வேற்றுமையால் விளைந்த தீமை திருக் கோயில்களிலும் பரவிற்று. அனைத்துமாய் இருப்பவன் அவனே என்றும், உள்குவார் உள்கிற்றெல்லாம் உடன்

நாயன்மார் திறம், பக்கம், 8, 10, 11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/97&oldid=695619" இலிருந்து மீள்விக்கப்பட்டது