பக்கம்:திரு. வி. க.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இ. அச. ஞானசம்பந்தன்

இருந்து அறிபவன்’ என்றும் யாதொரு தெய்வங் கண்டீர் அத் தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார் வந்தருளுவர் என்றும் நம் முன்னோர் பறைசாற்றியுள்ளனர். ஆனால், இறைவன் உறையும் திருக்கோயிலில் சிலர் சில தூரம் வரை மட்டுமே செல்லலாம். சிலர் கோயில் உள்ளும் நுழைதல் கூடாது என்றெல்லாம் முறை வகுத்தனர். இறைவன் திருமேனியின்மேல் எறும்பும் பல்லியும் ஊர்ந்தாலும் தவறு இல்லை; ஆனால், ஆறறிவு படைத்த மனிதருள் சிலர் அத் திருவுருவிடம் நெருங்கவும் தொடவும் கூடாது என விதி வகுத்தது விந்தையே. இத்தகைய ஒரு கொடுமை சைவ சமயத்தில் எந்நாளில் புகுந்தது என்று கூற இயலவில்லை. இதுபற்றிப் பெரியார் சித்த மார்க்கம் என்ற நூலில் இதோ பேசுகிறார்:

“உரிமை உணர்வின் சேய், உரிமை உணர்வு இல்லாத இடத்தில் சமரச நோக்குப் பிறத்தல் அரிது. சைவம் சமரசமுடையது என்பது உண்மை. அச் சமரசம் இப்பொழுது எங்கே இருக்கிறது: அஃது ஏட்டில் இருக்கிறது; வாக்கில் இருக்கிறது; செயலில் இருக்கிறதா? சாதி, மதம், நிறம், மொழி, நாடு முதலிய வற்றைக் கடந்த சிவன் வீற்றிருந்தருளும் திருக்கோயில் களிலாதல் சமரசம் உண்டா? சாதியற்ற சிவத்தைச் சாதிமயமாக்கிய நாட்டுக்கு எங்கிருந்து உய்வு வரும்? ‘எவ்வுயிரும் நீங்கா துறையும் இறை சிவன் என்று-எவ்வுயிர்க்கும் அன்பாயிரு’ என்பது ‘சைவ சமய நெறி. பாட்டு நன்றாயிருக்கிறது! பாட்டுக்கேற்ற நடை உண்டா?

சாதி முதலிய பேய்கள் தலைவிரித்தாடியபோது, நாயன்மார்கள் தோன்றி, அப் பேய்களை ஒட்ட முயன்றார்கள். சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்கோத்திர முங்குலமுங் கொண்டென் செய்வீர் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/98&oldid=695620" இலிருந்து மீள்விக்கப்பட்டது