பக்கம்:திரு. வி. க.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. வி. க. இ. 89

அப்பர் இடித்துரைத்தார். ‘சாதிகுலம் பிறப்பென்னும் சுழிபட்டுத் தடுமாறும், ஆதமிலி நாயேனை அல்லலறுத் தாட்கொண்டு, பேதைகுணம் பிறருருவம் யானென தென் னுரைமாய்த்துக், கோதிலமுதானானைக் குலாவு தில்லை கண்டேனே’ என்று வாதவூரர் அழுதார். அப்பருக்கும் வாதவூரருக்கும் திருவிழாக்கள் செய்யப் படுகின்றன. அவர்கள் வாக்குக்கோ? வெட்கம்! வெட்கம்! திருநாளைப்போவார், அப்பூதியடிகள், திருநீலநக்கர், திருநீலகண்ட யாழ்ப்பாணர், நமிநந்தி யடிகள் முதலியோர் வரலாறுகள் படிக்கப்படுகின்றன. ஆனால், நடக்கையோ? எல்லா மரபினரையும் அடியவராகக் கருதி அவர்கட்கெல்லாம் அடியேன்” ‘அடியேன்” என்று நம்பியாரூரார் பாடினார். அவ்வடியார் திருவுருவங்களும் திருக்கோயில்களில் வைக்கப்பட்டுள்ளன. திருத்தொண்டத் தொகை பாராயணமும், திருக்கோயில் வழிபாடும் பெருமித மாக நடைபெறுகின்றன. ஆனால், வாழ்வில் சாதிப் பித்து மாய்ந்ததா? மரம், பாம்பு, சிலந்தி, யானை, பறவை, விலங்கு முதலியவற்றிற்கு முத்தி கொடுத்த கருணை வள்ளல் எழுந்தருளிய இடத்திலுமா சாதி வேற்றுமை: கொடுமை! கொடுமை! சாதி வேற்றுமை தொலைந்து சமரசம் பரவும் வரை, சைவம் ஓங்கி வளராது. சாதிச் சைவத்துக்குச் சிவனருள் துணை செய்யாது. மனிதரை மனிதராகப் பாவியாத இடத்தில் சிவனருள் எங்ஙனம் நிலவும்? மனிதரை மனிதராக நினையாத ஒருவன் எங்ஙனஞ் சைவனாவான்? சாதி முதலிய களைகளைக் களைந்து, சைவ வான்பயிரை ஒம்ப இளைஞர்கள் ஊக்கங்கொண்டெழுதல் வேண்டும். இளைஞர்களே! சைவ இளைஞர்களே! சைவ உலகை நோக்குங்கள்; சைவ உலகம் கவலை யுற்றிருப்பதை உணருங்கள்; உரைசேரும் எண்பத்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு._வி._க.pdf/99&oldid=695621" இலிருந்து மீள்விக்கப்பட்டது