பக்கம்:திரு அம்மானை.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாலைக்கு அப்பால் 89 லுடைய அன்பில்ை உருகும். அவ்வாறு இறைவனே உருகச் செய்வான். "உருகுவித்தால் ஆரொருவர் உருகா தாரே' என்பது அப்பர் அநுபவம். c தப்பாமே தாள் அடைந்தார் கெஞ்சு உருக்கும் தன்மையினன். அவனுடைய தன்மை அருள். அதை கினேந்து கினைந்து, இறைவன் பெருங்கருணே இருந்தவாறு என்னே' என்று அன்பர்கள் உருகுவார்கள். இந்த உருக்கம் அவர்களிடம் உண்டாவது உறுதி. தாள் அடைக் தாரைத் தப்பாமல், நெஞ்சு உருக்கும். தன்மையை உடையவன்' என்றும் கூட்டிப் பொருள் கொள்ளலாம். உலகில் உள்ளவர்களுக் கும் தேவர்களுக்கும் அகப்படாமல் ஒளித்து கிற்கும் எம் பெருமான் தன் தாளே அடைந்தாரினின்றும் தப்ப இயலாது. " ஒளிக்கும் சோரனைக் கண்டனம்...நாள்மலர்ப் பிணையலில் தாள்தளை யிடுமின்' - என்று புகுந்தவர் மணிவாசகர்; “சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவது இனியே?’ என்று கேட்டவர். அவ் வாறு தாம் பிடித்தாலும் அதனைத் தம் செயலாசுச் சொல் உலாமல், "அவனே அவ்வாறு தப்பாமல் கெஞ்சில் புகுந்து .உருக்குகிருன் என்று சொல்கிருர், அவன் தென்திசையிலுள்ள பாண்டி காட்டைத் தன் ஆட்சிக்குரிய நிலமாகக் கொண்டவன். "அருள்புரிவான் நாடு'என்றும், "தென்பாண்டி நாடே தெளி'(திருத்தசாங்கம்) என்றும் தெளிவுறுத்துவார் மாணிக்கவாசகர். தமக்கு அருள் கிடைத்த ஊரையும் நாட்டையும் அபிமானத்தோடு போற்றுகிருர். தான் பிறந்த ஊரும் காடும் வேருக இருந்தாலும் தன்னே மணந்தவனுடைய காட்டையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/103&oldid=894692" இலிருந்து மீள்விக்கப்பட்டது