பக்கம்:திரு அம்மானை.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 திரு அம்மானே ஊரையுமே தன்னுடையனவாகக் கொள்ளும் கற்புடை மங்கையைப் போன்றவர் அவர். r இறைவன் பாண்டியகைத் திருவவதரித்துத் தன் அருளாட்சியில்ை பாண்டி நாட்டையே சிவலோகம் ஆக்கி விட்டான். சிவலோகத்துக்கு வருந்திச் சென்று அன்பர்கள் இடர்ப்படாமல் தென் பாண்டி காட்டை அடைந்து வழி பட்டு இன்புறச் செய்தான். அத்தகைய சிறப்புடைய நாடு பாண்டி காடு. s அப்பாண்டி காட்டைச் சிவலோகம் ஆக்குவித்த சிவலோகத்தில் சிவகணத்தினர் எங்கும் காணப்படு: வார்கள். எங்கும் அவன் அருளாட்சியே நிலவும். சிவ ைேடு தொடர்புடைய பொருள்களே எங்கும் தோற்றம் அளிக்கும். பாண்டி நாடும் அப்படியே விளங்கியது. அதை வியப்புடன் எண்ணி, அப்பாண்டிநாடு என்கிருர். பாண்டி நாட்டில் வாழும் மணிவாசகர் சேய்மைச் சுட்டால் சுட்டி யது, அது நெடுந்துாரத்தில் இருப்பது என்ற எண்ணத் தோடன்று. நினைக்க கினேக்க அளவுபடாமல் செல்லும் பருமையையுடைய காடாதலின் அந்த வியப்புத் தோன்ற |ப்பாண்டி நாடு என்ருர். - - அந்தப் பெருமானுடைய திருமுடி முதல் திருவடிவரை ல் எண்ணிப் பார்க்கிருர், அவ்வளவையும் விரிவாகச் சால்லி எளிதில் எல்லை காண முடியுமா? முடியையும் அடியையும் உள்ளத்திலே பதிக்கிருர், அந்தத் திருமுடியில் கங்கை இருக்கிருள். அவளுடைய அகந்தையை அடக்கித் தன் சடாபாரத்திலே தேக்கி வைத்துக் கொண்டவன் அவன். தனக்கு ஒர் அப்பன் இல்லாவிட்டாலும் அவன் தானே எல்லோருக்கும் தந்தையாக இருக்கிருன். தன் மகனுக்குத் தான் சேமித்த அரும்பொருளே வழங்குவது தந்தையின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/104&oldid=894695" இலிருந்து மீள்விக்கப்பட்டது