பக்கம்:திரு அம்மானை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அப்பாலேக்கு அப்பால் 9f இயல்பு. இறைவன் தனக்கே உரிய பொருளாகக் கொண்டு ஆளும் சிவலோகத்தைத் தன் அடியார்களுக்கு வழங்கும் தங்தையாக விளங்குகிருன். . . . . . - s அப்பு ஆர் சடை அப்பன் (அப்பு-நீர்; இங்கே கங்கை.) தண்மை நிறைந்த கங்கையைத் திருமுடியிலே சூடிய இறைவனுடைய திருவடி ஆனந்த மயமாக இருக்கிறது. அவன் திருவடியே வீடாக இருக்குமாதலின் அது ஆனந்த நிலையம். அது கழலை அணிந்தது. அடியார் கினைக்குமிட மெல்லாம் செல்லும் நீளம் உடைய வார்கழல் அது. அப்பு ஆர் சடை அப்பன் ஆனந்த வார்கழலே. அன்பர்கள் அந்தத் திருவடிகளேயே புகலாக அடைந்த வர்கள். தம்முடைய உடல் பொருள் ஆவி யாவற்றையும் அந்தத் திருவடிகளுக்கே உரியனவாகச் சமர்ப்பணம் செய்தவர்கள். - . - "அன்றே என்றன் ஆவியும் - உடலும் உடைமை எல்லாமும் குன்றே அனையாய் என்னைஆட் - கொண்ட போதே கொண்டிலையோ' என்று வேறிடத்தில் மணிவாசகர் பாடுவார். மெய்யடி யார்கள் சர்வசங்க பரித்தியாகம் செய்து கின் சரணல்லாற். சரணில்லை என்று புகுகிறவர்கள். ஆனந்த வார்கழலே - - ஒப்பாக ஒப்புவித்த உள்ளத்தார். கருவி கரணங்களேயெல்லாம் சமர்ப்பணம் செய்த அன்பர்களிடம் இறைவன் எழுந்தருளுகிருன்; அவற்றைத் தன் உரிமை ஆக்கிக்கொள்கிருன். ஒரு வீட்டை ஒருவன் மற்ருெருவனுக்கு விற்றுவிட்டால் வாங்கினவன் அந் த.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/105&oldid=894697" இலிருந்து மீள்விக்கப்பட்டது