பக்கம்:திரு அம்மானை.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:92 திரு அம்மானே வீட்டை உரிமைப் படுத்திக்கொண்டு அதிலே குடிபுகுவது இயல்பு. அவ்வாறு அடியார்கள் தம் உள்ளத்தை வேறு எதற்கும் ஒப்புவிக்காமல் இறைவன் ஆனந்த வார் கழலுக்கே ஒப்ப்டைக்கிருர்கள். அங்கே அவன் புகுகிருன். உலகிலுள்ள மக்கள் ஆசைவயப்பட்டுத் தம் கெஞ்சத்தை எது எதற்கோ ஒப்படைக்கிருர்கள். அப்படி யாவது கிலேயாக ஏதேனும் ஒன்றுக்கு ஒப்படைத்து விட்டிருக்கிருர்களா? இல்லை. கணந்தோறும் எந்த எக்கப் பொருளுக்கோ ஒப்படைக்கிருர்கள். அங்கே எதுவும் கிலேயாக நிற்பதில்லை. வீதியிலே எப்போதும் மக்களும் விலங்கினங்களும் போய்க் கொண்டே இருப்பது இயல்பு. அங்கே யாரும் தங்கமாட்டார்கள். நம்முடைய மனமும் காமம் குரோதம் முதலிய குணங்களும், காம் பற்றுக் கொண்ட மக்களும், வேறு எத்தனையோ பொருள்களும் இடைவிடாமல் உலவிக்கொண்டே இருக்கும் வீதிபோல இருக்கிறது. அப்படிப் போகின்றவர்களுடைய சுவடுகளே வீதியில் காணப்படுகின்றன. மக்கள் நடமாட்டத்திலுைம் வண்டிகளின் போக்குவரத்தாலும் மேடு பள்ளமும் புழுதியும் மண்டுகின்றன. மனமும் அப்படித்தான் ஆகிவிடு கிறது. எது எதற்கோ மனத்தை ஒப்படைப்பதல்ை வந்த வினை இது. - . நாளுக்கு ஒருவர் வந்து குடியேறும்படி ஒரு விடுதி இருந்தால் அதில் குப்பை அதிகமாகச் சேரும். அதை அப் போதப்போது துப்புரவாக வைக்காவிட்டால் வந்தவர்கள் போட்ட குப்பைகள் அதில் சேர்ந்து கொண்டே இருக்கும். பலரும் கூடும் சந்தை எப்படி இருக்கிறது? அங்கே அமைதி இருப்பதில்லை. இந்த மனம் கிரந்தரமாக யாரும் குடியிராத வீட்டைப் போலவும், சந்தையைப்போலவும் இருக்கிறது. எங்கே பார்த்தாலும் அழுக்கு, குப்பை,கழித்தபண்டங்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/106&oldid=894699" இலிருந்து மீள்விக்கப்பட்டது