பக்கம்:திரு அம்மானை.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. பிறவாமல் ಹTLu೧೯r இறைவனப் பதவி மோகம் உடையவர்களும் செல் வச் செருக்கு உடையவர்களும் காண்பது அரிது. உலகத் தைப் பாதுகாக்கும் திருமாலும், உலகத்தைப் படைக்கும் பிரமனும் தம்முடைய ஆற்றலால் அவன் அடிமுடியைக் காண முடியவில்லை என்பதைக் காட்டிக் கொடுத்தார்கள். போகத்தில் சிறந்து கின்று, தேவர்களுக் கெல்லாம் தலைவன் என்னும் பதவியில் இறுமாந்திருக்கும் இந்திரலுைம் அவனைக் காணமுடியாது. அவர்கள் எந்தப் பிறவியை எடுத்தாலும் தம்முடைய வினேகாரணமாக அந்தப் பிறவி யில் அநுபவிக்க வேண்டியதை அநுபவித்தார்களே பன்றி இறைவனைத் தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை; அப்படித் தேட முயன்ருலும் அவர்கள் காணவில்லை. மையைக் கண் அழகு மிகும்படி இட்டிருக்கும் ப்ெண் ணேப் பார்த்து இறைவன் புகழைச் சொல்லத் தொடங்கிய மணிவாசகர், இந்த அருமைப்பாட்டை முதலில் சொல் கிரு.ர். . . - , மைப்பொலியும் கண்ணி, கேள்; மால் அயளுேடு இந்திரனும் எப்பிறவியும் தேட, அத்தகைய அரிய பெருமான் மாணிக்க வாசகரை ஆட்கொண்டான். அவர் தம்மைச் சிறிதும் தகுதி யில்லாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/111&oldid=894713" இலிருந்து மீள்விக்கப்பட்டது