பக்கம்:திரு அம்மானை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§8. திரு அம்மானை வராகச் சொல்லிக் கொள்வதைப் பலகால் பார்த்தோம். 'ஒன்றுக்கும் பற்ருத என்னையும் அவன் ஆட்கொண் டான்' என்று இறைவன் கருனேயை வியந்து பாராட்டு வது அவர் இயல்பு. ‘இறைவன் தகுதியில்லாத என்னேயும் தன் இனிய அருளால் இந்தப் பிறவியிலே ஆட்கொண் டான்' என்கிருர். *: - இறைவன் திருவருள் இரண்டு வகைப்படும். பாவம் செய்தவர்களே ஒறுத்துத் திருத்துவதும் அவனுடைய அருள் தான். அதனால் அவர்களுக்குத் துன்பம் நேர்ந்தாலும் முடிவில் அவர்கள் பாவம் கரைந்து இறைவன் திருவரு ளுக்கு ஆளாவார்கள். அழுக்குள்ள துணியை அடித்துத் துவைப்பது போல, பாவங்களே உடைய உயிர்களை ஒறுத்து அவன் தூய்மைப் படுத்துகிருன். இது அவனுடைய வல்லருள் அல்லது மறக்கருணே. மருத்துவன் நோயாளி யின் புண்ணே அறுத்துக் கர்ரமருந்திட்டுச் சிகிச்சை செய்வது போன்றது. இது. அழுக்கைப் பூசிக் கொண்ட குழந்தையை அடித்து இழுத்து வந்து குளிப்பாட்டித் தாய் தாய்மை செய்வாள். உயிர்களிடத்தில் கருணையுடைய எம்பெரு மான் பாவங்களாகிய அழுக்கை ஏற்றிக் கொண்ட அவற் றைத் துன்பமென்னும் நீரில் தோய்த்து அடித்துத் தூயவை ஆக்குகிருன். அதல்ை இறைவனுடைய அன்பர்கள் தமக் குத் துன்பம் நேர்ந்த காலத்தில், அதுவும் இறைவனு டைய அருட் பிரசாதம் என்ற் ஏற்றுக் கொள் வார்கள். அவர்கள் இடும்பையைக் கண்டு கவலையடையாமல் ஏற்று அநுபவித்து, "நம்முடைய கடன் கழிகிறது' என்ற உள்ளத்தோடு இருப்பார்கள். நல்ல பிள்ளைகளைத் தாய் கட்டி முத்தம் இடுவது போல இறைவன் மெய்யன்பர் களைத் திருவருளில் அணேத்து ஆட்கொள்வான். இந்தப் பிறவிலேயே என்னைத் தன்னுடைய இனிய அருளால் இறைவன் ஆட்கொண்டான்' என்கிருர் மணிவாசகர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/112&oldid=894715" இலிருந்து மீள்விக்கப்பட்டது