பக்கம்:திரு அம்மானை.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 திரு அம்மான இறைவனே எப்படிக் காணலாம்? எங்கே காணலாம்: அவன் எங்கும் கிறைந்தவகை இருந்தாலும் நம்மால் அறிய முடிவதில்லை. உலகத்தில் நாம் காணும் பொருள் யாவும் ஒரு காலத்தில் அழிந்து போகின்றவை. அந்தப் பொருள் களைக் கண்டு, அவை கிலேயில்லாத பொய்ப் பொருள்கள் என்பதை உணராமல், அவற்றையே மெய்யாகக் கொண்டு, அவற்ருேடு தொடர்புகொண்டு வாழ்கிருேம். உயிர், இறை வன், பாசம் என்னும் மூன்றும் கித்தியமான பொருள்கள் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. இறைவன் தான் தனியே எல்லாவற்றையும் கடந்து நின்ருலும், உயிர்க ளிடத்திலும் அவர்களைக் கட்டுப்படுத்தும் பாசத்திலும் கலந்து கிற்கிருன்; மெய்ஞ்ஞானிகள் இதை உணர்வார்கள். மெய்யான மூன்று பொருள்களிலும் அவனுடைய, காட்சி யைக் கானுவார்கள். - மெய்ப்பொருட்கண் தோற்றமாய். சில காலம் மெய்யாகத் தோற்றிப் பிறகு அழியும் பொருள்களே பிரபஞ்சத்தில் இருக்கின்றன. உடம்பு, உலகு யாவுமே ஒருகாலத்தில் அழிபவை. அவை சில காலம் உண்மையாக உள்ளவை என்று தோற்றிலுைம் அவை: நிலையாக நிற்பதில்லை அவற்றிற்கு கிலேபேறு இல்லை. இறைவன் என்றும் கித்தியமாக உள்ளவன்; என்றும் கிலேபெற்றிருப்பவன். அப்படி உள்ள தன்மையாகிய சத்தே அவன் வடிவம். சச்சிதானந்த உருவுடையவன் இறைவன் என்பார்கள். சத் என்பது உண்மை அல்லது கிலேபேற்றைக் குறிக்கும். அது அவனுடைய திருவுருவம் . r - மெய்யே ി8:കേന്ദ്ര,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/114&oldid=894719" இலிருந்து மீள்விக்கப்பட்டது