பக்கம்:திரு அம்மானை.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவாமல் காப்பவன் 101. (கில்பெறே மெய்யாக என்று ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும்.) - உலகில் உள்ள ஜடப் பொருள்களுக்கும் சித்துப் பொருள்களுக்கும் ஆகாரமாக இருப்பவன் இறைவன். அவன் அருளாணேயினலே யாவும் இருக்கின்றன; இயங்கு கின்றன. எல்லாப் பொருள்களுக்கும் மூலப் பொருளாக வும் அவன் விளங்குகிருன். - எப்பொருட்கும் தானே ஆய். எவ்வகையான ஆன்மாக்களும் அவனிடம் த்ங்கியிருக் கின்றன. அவனுடைய வடிவமே இப்பிரபஞ்சங்கள். சிவ பெருமானுக்கு எட்டு வடிவங்கள் உண்டாதலின் அவனே அட்டமூர்த்தி என்பர். அந்த மூர்த்தங்களுள் ஒன்று உயிர். உடலென்னும் வடிவுக்குள் இருந்து அதை இயக்கும் உயிரைப் போல, உயிருக்குள் உயிராக இருந்தும் அதை இயக்கும் பெருமான் அவன். எவ்வகை உயிர்களுக்கும் பிறவியினின்றும் விடுதலை அடையும் கில வரும்போது, அவன் வீட்டின்பமாகவே இருப்பான். யாவைக்கும் வீடு ఇఅు, இதுகாறும் சொல்லி வந்த இயல்புகளையுடைய அந்தப் பரம் பொருளே, சிவபெருமான். அவன் தொண்டர்களுக் குரியவகை இருப்பவன். அடிமைப்பட்டவர்கள் தம் தலைவனிடம் உரிமை கொண்டாடி, எங்கள் எஜமானன். என்று சொல்வது போல, அடியார்கள். நம் சிவன்' என்று உரிமை கொண்டாடுவார்கள். அவன் அவர்களே ஏற்று ஆட்படுத்திய அநுபவமுத்திரையைப் பெற்றவர்களாதலின், அக்த உரிமையைக் கொண்டாடி அவனோடு பிரிக்கலாகாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/115&oldid=894721" இலிருந்து மீள்விக்கப்பட்டது