பக்கம்:திரு அம்மானை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

103 திரு அம்மானே இறுகப் பிணைந்த உறவை உடையேம் என்று பெருமிதம் கொள்வார்கள். - அப்பொருளாம் நம் சிவன. உடன் விளயாடும் பக்தியிற் சிறந்த பெண்களையும் சேர்த்து, நம் சிவன்' என்கிருர் மணிவாசக நாயகியார். - நம் சிவனைப் பாடுதுங்காண், அம்மாளுய்! ‘மாலும் அயனும் இந்திரனும் தேட அவர்களுக்கு அரியகை இருக்கும் எம்பெருமான, ஒன்றுக்கும் பற்ருத: அடியேனேயும் இனிய அருளால் ஆட்கொண்டு, இனிமேல் இந்தப் பிறவி நோய் என்னே அணுகாமல் பாதுகாத்து விளங்கும் பரம்பொருளே, மெய்யான பொருள்களில் தோற்றம் உடையவகை, தன்னுடைய கிலேபேறே திருவுருவமாய், எல்லாப் பொருள்களுக்கும் தங்கும் இட மாய் உள்ள அந்தப் பரம்பொருளே, நாம் பாடி அம்மானே ஆடுவோம் என்கிருர். இப்படி உறுதிப்பாட்டோடு சொல்லும் பெருவாழ்வு ஜீவன்முக்தராகிய அவருக்கு உண்டாயிற்று. மைப்பொலியும் கண்ணி, கேள்; மால் அயனேடு இந்திரனும் எப்பிறவி யும்தேட, என்னையும்தன் இன் அருளால் இப்பிறவி ஆட்கொண்டு இனிப்பிறவா மேகாத்து, மெய்ப்பொருடகண் தோற்றமாய், மெய்யே கிலபேருய்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/116&oldid=894723" இலிருந்து மீள்விக்கப்பட்டது