பக்கம்:திரு அம்மானை.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறவாமல் காப்பவன் 103 எப்பொருட்கும் தானேயாய், யாவைக்கும் வீடுஆகும் அப்பொருளாம் நம்சிவனைப் - பாடுதுங்காண், அம்மாளுய்!

  • மையில்ை விளக்கம் பெற்ற கண்ணேயுடைய தோழியே, கேட்பாயாக திருமாலும் அயனும் இந்திரனும் எந்தப் பிறவி எடுத்தும் தன்னை அறியாமல் தேடி வருந்தவும், ஒன்றுக்கும் பற்ருத அடியேனேயும் தன்னுடைய இனிய திருவருளினல், இந்தப் பிறவியிலே ஆளாகக் கொண்டு, இனிமேல் இங்கே பிறந்து வரும் கோயினின்றும் என்னைப் பாதுகாத்து, எல்லாப் பொருள் களுக்கும் தான் ஒருவனே தலைவனகி, எல்லாப் பொருள் களுக்கும் தங்கும் இடமாகி விளங்கும் அந்தப் பரம் பொருளாகிய, நம்முடைய சிவபெருமானே, அம்மானை ஆடும் பெண்ணே, பாடுவோம். - .

(மைப்பொலியும் கண்ணி-இறைவனுடைய திருவுருவத் தை நன்ருகப் பார்ப்பதற்கு மையிட்டுக் கொண்டு, அதல்ை பொலியும் கண்ணே உடைய பெண்ணே. மால் அயனேடு. மாலோடு அயனேடு; ஒடு: எண் ஒடு, மாலும் அயனும் இந்திரனும் வெவ்வேறு பிறவி எடுத்த எவரும் என்றும் பொருள் கொள்ளலாம். என்னையும் என்ற உம்மை, இழிவு சிறப்பு; ஒன்றுக்கும் பற்ருத, தகுதியில்லாத அடியேனேயும் என்று பொருள் கொள்ளவேண்டும். மால் அயன் இந்திரன் ஆகியவர்கள் பல பிறவி எடுத்துத் தேடியும் காணரிய எம்பெருமான் இந்த ஒரு பிறவியில் என்னைத் தான் தேடி வந்து ஆட்கொண்டான் என்ற நயம் தொனிக்கிறது. இன் அருளால்-அடியேன் தன்னைத் தேடி வருந்தாமல், என்னே ஆண்ட இனிய திருவருளால். இப்பிறவி - இந்த ஒரு பிறவி யிலே. இனி-இனிமேல். இந்தப் பிறவி அவனுல் ஆட்கொள் ளப்பயன்பட்ட பிறவி. இந்தப் பிறவியில் பெற்ற பேறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/117&oldid=894725" இலிருந்து மீள்விக்கப்பட்டது