பக்கம்:திரு அம்மானை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. அன்பர்க்கு மெய்யான் பெண்கள் அம்மானை ஆடும்போது அம்மாக்னக் காய் களே மேலே வீசி எறிந்தும் கையால் பிடித்தும் மறுபடியும் வீசியும் ஆடுவார்கள். மூன்று அம்மானைக் காய்களில் ஏதாவது ஒன்று மேலே இருக்கும். இரண்டு கைகளில் இருக்கும். எப்போதும் ஒன்று மேலே போக அதைக் கையில் பிடிக்கும் போது கையில் உள்ளதை மேலே வீசி ஆடுவார்கள். இப்படி ஆடுவதற்கு நல்ல பழக்கம் வேண்டும். அது அவர்களுக்குக் கைவந்த கல. - அப்படி ஆடும் போது அவர்களுடைய கைகளில் உள்ள வளைகள் ஒலியெழுப்புகின்றன. கை ஆர் வண் சிலம்ப கன்னிப் பெண்கள் ஆதலின் கைநிறைய வளைகளே அணிந்திருக்கின்றனர். கைகள் மேலும் கீழும் அசைகின்ற போது அவை கலகலக்கின்றன. - - அம்மானேக் காய்கள் மேலே போவதும் கீழே வருவது மாக இருக்க அவற்றை கிமிர்ந்து கோக்கியும் கையால் பிடித்தும் ஆடுவதால் அவர்கள் காதுகளில் அணிந்துள்ள குழைகள் ஆடுகின்றன. - - காது ஆர் குழை ஆட.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/119&oldid=894728" இலிருந்து மீள்விக்கப்பட்டது