பக்கம்:திரு அம்மானை.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பர்க்கு மெய்யான் 109. பொருளே உணர்ந்து அவன் இயல்புகளை அறிந்தும் அவனைத் தியானித்து உள்ளேயும் காணும்படி பல. சோபானங்கள் உள்ளன. படிப்படியாக மேல் எறிச் சென்ருல் அவன் மெய்யான பொருள் என்பதையும், யாவருக்கும் மேலான பரம்பொருள் என்பதையும், எங்கும். செறிந்தான் என்பதையும் உணரமுடியும். அவன் ஐயாறு முதலிய தலங்களில் அடியார்கள் கண் காண உருவத் திருமேனி கொண்டு வீற்றிருக்கிருன். அவ்வாறு எழுந்தருளியிருப்பது அவனுடைய கருணையைக் காட்டுகிறது. மிகமிக நுட்பமான பொருளாகிய அவன் தன்னை அடியார்கள்கண்ணுல் கண்டு வழிபடுவதற்காகவே பல வடிவங்களை மேற்கொள்கிருன். தலங்களை நாடிச் சென்று தனக்கென்று ஆலயத்தை அமைக்கச் செய்து அங்கே, இருந்து காட்சிகொடுத்தருள்கிருன் கரசரணுதி அவயங்களை யும் கண் முதலிய பொறிகளையும் உடைய மக்கள் வாழும். இடத்திற்கே வந்து அவர்கள் எளிதில் தரிசித்து உய்யும்படி அருள்பாலிக்கிருன். கீழுள்ளவன் எப்போதும் மேலே போகவேண்டு மென்று ஆசைப்படுவது இயல்பு. ஆனல் தனக்கு மேல் ஒன்றும் இல்லாத பரம்பொருள், மேலே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. தனக்குக் கீழே உள்ள தேவர்களையும் அன்பர்களையும் கண்டு அவர்களுக்கு அருள் செய்யஇறைவனே இறங்கி வருகிருன். யாருக்கும் எட்டாத, நிலையில் அவன் இருந்தால் அவன் கருணையைப் பெறுதல் யாவருக்கும் அரிது. அந்தக் கருணைச் செல்வம் பயன் படாமலேபோய்விடும். 'செல்வத்துப் பயனே ஈதல் (புற. நானூறு)என்றுசொல்வார்கள். பொருட்செல்வமே பிறருக்கு ஈவதற் குரியது என்ருல், அருட்செல்வமும் அத்தகைய தன்மை உடையதுதானே? எனவே பெருவள்ளலாகிய இறைவன் தன்னிடம் நிரம்பியிருக்கும் அருட்செல்வத்தை, வாரி வாரி வழங்க எண்ணுகிருன். & ... --

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/123&oldid=894737" இலிருந்து மீள்விக்கப்பட்டது