பக்கம்:திரு அம்மானை.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 10 திரு அம்மானே கைகால் ஊனமுற்றவர்கள் உள்ள இடத்துக்கே சென்று சோறும் துணியும் கொடுக்கும் வள்ளலைப் போல இறைவன் மக்கள் வாழும் உலகத்துக்கே வந்து அவர்கள் கண்காணும்படி ஐயாற்றிலும் பிற தலங்களிலும் அமர்ந்து காத்திருக்கிருன். அவனிடம் கருணை சுமையாக இருக்கிறது. அதனைச் சிறிது சிறிதாக இறக்குவதற்குரிய இடங்களே அவன் தேடிக்கொண்டிருக்கிருன். அவன் அருளைப் பெறு வதற்கு அடியார்கள் அவனத் தேடிக்கொண்டிருக் கிருர்கள். இருவரும் சந்திக்கும் இடம் திருக்கோயில். அவ்வாறு தன் அருளே வழங்குவதற்காக அவன் வந்து கோலம் காட்டி அமர்ந்துள்ள இடங்களில் ஒன்று திருவையாறு. சோழ நாட்டில் உள்ள தலம் அது. அந்தப் பெருமானைப் பாடி அம்மானே ஆடுவோம்' என்று மணி வாசக நாயகிசொல்கிருள். . - ஐயாறு அமர்ந்தானப் பாடுதும்காண், அம்மாளுய்! - குறி குணங்கள் அற்ற ஒன்றை மனத்தால் கினைக்கவோ வாயால் சொல்லவோ ஒண்னது. குறி குணங்கள் அற்ற இறைவன் தன் இயல்புப்படியே இருந்தால் அவனே யாரும் அறிந்துகொள்ள முடியாது. ஆகவே, அன்பர்கள் காடி வரும் போது அவர்கள் கண்ணும் கண்டும் கையால் தொழுதும் வழிபட்டு கலம் பெறும்படி அவன் ஐயாற்றில் வீற்றிருக்கிருன்; ஒரு நாள் அன்று, இரு காள் அன்று; அவன் அங்கே கித்திய வாசம் செய்கிருன். "அந்தக் கருணையாளனைப் பாடுவோம்' என்கிருள். அல்லாதார்க்கு அல்லாத வேதியன் ஐயாற்றில் அமர்ந்து கோலம காட்டி அன்பர்களுக்கு மெய்யாகை விளங்கு கிருன். - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/124&oldid=894739" இலிருந்து மீள்விக்கப்பட்டது