பக்கம்:திரு அம்மானை.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 திரு அம்மானே விழ்ந்து பாய எனவும் சொல்லலாம். தேன் பாய-கூந்தலி லிருந்து வண்டு வெளியே பாய. வளை, சிலம்பும் ஒலிக்குச் சுருதி கூட்டியதைப் போல வண்டுகள் முரல்கின்றன. சிவப்ெருமான் செம்மேனியம்மான்; ஆதலின் செய் யான் என்ருர், செம்மை என்பதற்கு நிறைவு, செப்பம் முதலிய பல பொருள்கள் உண்டு. ஆதலின் அவற்றை உடையான் என்று பண்பு பற்றியும் பொருள் கூறலாம். செய்யான வெண்ணிறு அணிந்திரனே! முரண் தொடையும் அவ்வலங்காரமும் வந்தன. சிலர் சில காலம் அடியாராக இருந்து பிறகு தலைவராவார்கள். பிறரைக் கும்பிட்டுப் பதவி உயர்வு பெற்று அப்பால் பிறர் கும்பிடும் உயர் பதவியைப் பெறுவார்கள். அப்படியின்றி அகாதி யாகவே தலவகை இருப்பவதைலின் அவன் கைகள் என்றும் சேர்வதை அறிந்ததில்லை. பிறர் கைகள் சேர் வதையே காண்பவனன்றித் தன் கைகளைக் குவித்துச் சேர்க்கும் நிலையை அறியாதவன் அவன். . அவன் எங்கும் செறிந்து கின்ருலும் யாவரும் அவனே அறிய முடிவதில்லை. பாலில் எங்கும் நெய் பரந்திருந்தாலும் கடைவார்களுக்கே அது புலணுவது போல அன்பர்களுக்கே அவன் தன் அருள நுபவத்தை வழங்குகிருன். அல்லாதார்அன்பர் அல்லாதார். அல்லாத - மெய் அல்லாத, வேதியனே-வேதப் பொருளாய் உள்ளவன. யார் அறிக் தாலும் அறியாவிட்டாலும் அகாதிகாலமாக அக்க் வேதம் அவன் இயல்பைச் சொல்லிக் கொண்டே யிருக்கிறது. அது. சொல்லி வழிகாட்டியும் அதனை உணராது, மெய்ப் பொருளே உணர முயலாது இருப்பவர்கள் பலர். அவர் களுக்கு உண்மைப் பொருள் தான் என்பதை இறைவன் உணர்த்துவதில்லை. செரிக்கும் ஆற்றல் இல்லாத குமுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/126&oldid=894743" இலிருந்து மீள்விக்கப்பட்டது