பக்கம்:திரு அம்மானை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14. தொழும்பில் ஈடுபடுத்தியவன் இப்போது மானிடராகப் பிறந்த நாம் இதற்கு முன் எத்தனையோ பிறவிகளை எடுத்து வந்திருக்கிருேம். அதற்குக் கணக்கே இல்லை. இன்ன பிறவிதான் எடுத் தோம் என்ற வரையறையும் இல்லை. பல பிறவிகளே எடுத்து எடுத்துப் பிறகே இந்த மனிதப் பிறவி வாய்த்திருக் கிறது. சிறியதும் பெரியதுமாக உள்ள ஜீவராசிகள் பல வாகப் பிறந்திருக்கிருேம். தாழ்ந்த பிறவிகளாகிய விலங் கினங்களில் பெரியதாகிய ஆனையாகப் பிறந்திருக்கலாம்; மிகச்சிறியதாகிய, கண்ணுக்குத் தெரியாத புழுவாகவும் பிறந்திருக்கலாம். இப்படிப் பிறந்த பிறப்புகளே கினேக் கிருர் மாணிக்கவாசகர், - ஆனையாய்க் கீடமாய். - உயர்ந்த பிறவி மானிடப்பிறவி. அந்தப் பிறவியில் புண்ணியம் மிகுதியாகச் செய்தால் தேவராகப் பிறப்போம்; பாவம் மிகுதியாக இருந்தால் விலங்கினமாகப் பிறப்போம். தேவராகப் பிறந்தாலும் புண்ணியப் பயன் தீர்ந்தால் இந்தப் பூமியில் மானிடராகப் பிறக்க வேண்டும். இப்படி மானிடராகவும் தேவராகவும் வரும் பிறப்புச் சுழற்சி யுள்ளும் நாம் அகப்பட்டிருப்போம். மானிடராய்த் தேவராய். இவையல்லாமல் இடைப்பட்ட பல பிறவிகளையும் நாம் எடுத்திருப்போம். பிற என்ற வினேயடியாகப் பிறப்பு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/128&oldid=894747" இலிருந்து மீள்விக்கப்பட்டது