பக்கம்:திரு அம்மானை.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொழும்பில் ஈடுபடுத்தியவன் 115

பிறவி என்ற சொற்கள் அமைவது போலப் பிறவு என்பதும் பிறப்பைக் குறிக்க வரும்.

' அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது"

என்ற திருக்குறளில் வரும் பிறவாழி என்பதற்குப் பிறப் பாகிய கடல் என்று ஒருவர் உரை வகுத்தார்.

'பிறவாழிக் கரைகண் டாரே'

என்ற வில்லி பாரதச் செய்யுளில் பிறவாழி என்பதற்குப் பிறவிக்கடல் என்று பொருள். அந்தப் பிறவு என்ற சொல்லே இங்கே ஆளுகிருர் மணிவாசகர். ஆன, புழு, மானிடர், தேவர் ஆகிய பிறப்பு, அல்லாத ஏனைய பிறவிகள் பலவும் பிறந்தும் இறந்தும் இளைத்துப் போனேன்' என் கிருர்.

ஏனைப் பிறவாய்ப் பிறந்து இறந்து எய்த்தேன.

பிறப்பு உண்டேல் இறப்பும் உண்டு. பிறப்பதும் இறப்பதும் இணைந்தவை. அவற்றிலே சிக்கி அல்லற்படு கிறது ஆன்மா. பிறப்பிலுைம் இறப்பிலுைம் துன்பம் உண்டாகிறது என்று அறிவது ஞானத்தின் அடிப்படை, முதல் பாடம். மாணிக்கவாசகர், "இப்படிப் பல பிறவிகளை எடுத்து அலுத்துப் போனேன்' என்று சொல்கிருர், சிவ புராணத்தில் இந்தப் பிறப்புகளுக்கு ஒரு பட்டியலே கொடுக்கிரு.ர்.

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்அசுர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்துஇளைத்தேன் எம்பெருமான்'

என்று சொல்கிரு.ர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/129&oldid=1418436" இலிருந்து மீள்விக்கப்பட்டது