பக்கம்:திரு அம்மானை.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

திரு அம்மானை


இவ்வாறு பிறந்தும் இறந்தும் வரும் ஓயாத சுழற்சியிலே அல்ல லுற்று, 'இந்தத் துன்பம் போதும், போதும்' என்று இளைப்பு வந்துவிட்டது. ஏனைப் பிறவாய்ப் பிறந்து இறந்து எய்த்தேனை. அவ்வாறு இளைப்புற்று நின்ற அவரை ஆண்டவன் ஆட்கொண்டான். பல தூரம் நடந்து நடந்து இளைத்த ஒருவனுக்கு அந்த இளைப்பை ஆற்றி நல்ல பானத்தையும் உண வையும் வழங்கியது போல இறைவன் அருள் புரிந் தான். அவன் முதலில் உள்ளத்தை உருகச் செய்தான். உள்ளம் உருகினால் அந்த உருக்கம் உடம்பிலும் தோற்றும். 'உடல் குழைய என் பெலாம் நெக்குருகும்.' இறைவன் இந்த உடலில் இடங்கொண்டு இதை உருக்கினானாம். என் பின் வலிமையால் நிமிர்ந்து நின்று அகங்கரிக்கும் தோற்றம் மாறி மெழுகு போலக் குழைந்து உருகும் இயல்பு உண் டாயிற்று. ஊனையும் நின்று உருக்கி. - நாம் எப்போதும் உடலின் நினைவாகவே இருக்கிறோம். உணவு, உடை, இருக்கை, பொறிகளுக்கு இன்பந்தரும் பொருள் கள் ஆகியவற்றைத் தேடி நுகர்வதிலே நம் வாழ் நாள் முழுவதும் கழிகின்றது. ஞானிகள் இந்த உடம்பைப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள். “பிறப்பறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை என்பார் திருவள்ளுவர். இந்த உடம்பையே கோயிலாகக் கொண்டு இறைவன் தங்கும் பொழுது இதைப்பற்றிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரு_அம்மானை.pdf/130&oldid=1418520" இலிருந்து மீள்விக்கப்பட்டது